ஆசியான் அமைப்புக்கு 7.4 கோடி ரூபாய் கரோனா நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி!
டெல்லி: ஆசியான் அமைப்புக்கு கரோனா நிவாரண நிதியாக 7.4 கோடி ரூபாய் (ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்) வழங்கப்பட உள்ளதாக பிரமர் மோடி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அதிமுக செயலாளர்கள் நியமனம்
புதுச்சேரி: மாநில அதிமுக கிழக்கு கழகச் செயலாளராக அன்பழகனும் மேற்கு கழக செயலாளராக ஓம்சக்தி சேகரும் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
ஒபாமாவின் புத்தகத்தில் இடம்பிடித்த ராகுல்!
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெளியிட்ட, தனது அரசியல் நினைவுக் குறிப்பான "வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்" (A Promised Land) என்ற புத்தகத்தில் இந்திய அரசியல் தலைவர்களான ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
இது எனது கடைசி தேர்தல் அல்ல... அந்தர்பல்டி அடித்த நிதிஷ்குமார்!
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்ட நிதிஷ்குமார், தேர்தல் பரப்புரையில் இதுதான் எனது கடைசி தேர்தல் எனத் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது, இது எனது கடைசி தேர்தல் அல்ல, தான் கூறிய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு கரோனா இல்லை!
ஆர்பிசிஆர் கிட் மூலம் கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், வைரஸ் தொற்று இருப்பதாக தவறாக காட்டப்பட்டது. தற்போது மூன்று மாறுபட்ட பரிசோதனைகள் மேற்கொண்டதில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது.
அமித்ஷா மீது நடவடிக்கை எடுத்த ட்விட்டர்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ட்விட்டர் கணக்கில் வைக்கப்பட்டிருந்த டி.பி-யை ட்விட்டர் நிர்வாகம் நீக்கி நடவடிக்கை எடுத்தது. பின்னர், சிறிது நேரத்தில் மீண்டும் அதனை பழைய நிலைக்கு மாற்றியது.
தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது!
வேலூர்: கொலை, கொள்ளை ஆள் கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி ஜானி, பெங்களூருவில் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார்.
தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் திடீர் சோதனை!
வேலூர்: தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கேலோ வீரர்களுக்காக ரூ.5.78 கோடி ஒதுக்கிய எஸ்.ஏ.ஐ
இந்தியாவின் இரண்டாயிரத்து 783 கேலோ விளையாட்டு வீரர்களுக்காக இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரூ. 5.78 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
ஓதுவது ஒழியேல்; வாசிப்பை ஊக்குவிக்கும் சுவரோவியங்கள்!
மக்களுக்கும் புத்தகங்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க பர்னாலாவின் திவானா கிராமத்தில் உள்ள இளைஞர்கள் பாராட்டத்தக்க முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.