ETV Bharat / state

காலை 11 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 11 AM - tamilnadu latest news

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்தி சுருக்கம்..

Top 10 News@11 Am
Top 10 News@11 Am
author img

By

Published : Jan 14, 2021, 11:32 AM IST

தேர்தல் களம் 2021: சசிகலா விடுதலை பேச்சுகளால் அதிமுகவில் ஏற்பட்டுள்ள சலசலப்பு!

சசிகலாவை தவறாகப் பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது, எங்கே இருந்தாலும் நாங்கள் அவரை போற்றுவோம் என்று முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா சென்னையில் நடந்த போராட்டத்தில் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து!

தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டை காண மதுரை வருகிறார் ராகுல் காந்தி!

மதுரையில் நடைபெற்று வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காண்பதற்காக மதுரை வருவதாக ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பொங்கல் கொண்டாடிய பாதுகாப்பு படை வீரர்கள்!

புதுச்சேரி: பாதுகாப்பிற்காக வந்திருந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கடற்கரையில் பொங்கலிட்டு கொண்டாடினர்.

சயீத் முஷ்டாக் அலி : அசாருதீன் அதிரடியில் கேரளா அபார வெற்றி!

சயீத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரில் நேற்று (ஜன.13) நடைபெற்ற லீக் ஆட்டதில் கேரளா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

தாமிரபரணி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு; இரண்டாவது நாளாக வீடுகளை சூழ்ந்த வெள்ளம்!

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட அணைகளில் இருந்து நள்ளிரவு 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இரண்டாவது நாளாக வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மத்திய அமைச்சர் உடல்நிலை சீரடைந்துவருகிறது

விபத்துக்குள்ளான அமைச்சர் ஸ்ரீபத் நாயக் உடல் நிலை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், வென்டிலெட்டர் சிகிச்சையிலிருந்து அவர் வெளியே கொண்டுவரப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘திருவண்ணாமலையில் மஞ்சு விரட்டுக்குத் தடை’- எஸ்பி அரவிந்த்!

திருவண்ணாமலை: இந்தாண்டு நடைபெறும் மஞ்சுவிரட்டு, எருது விடுதல் உள்ளிட்ட விழாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

திரையில் தோன்றிய ஈஸ்வரன் - ஆர்ப்பரித்த சிம்பு ரசிகர்கள்!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தடைகளை தாண்டி திட்டமிட்டபடி சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் இன்று (ஜன.14) வெளியானது.

தாய்லாந்து ஓபன்: இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார் சாய்னா!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றுப்போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் வெற்றி பெற்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.