ETV Bharat / state

7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @7PM - சசி தரூர்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

7 மணி செய்திச்சுருக்கம்
7 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 16, 2021, 7:00 PM IST

Updated : Jul 16, 2021, 7:21 PM IST

தலிபான் தாக்குதலில் உயிரிழந்த தானிஷ் சித்திக் - அரசியல் தலைவர்கள் இரங்கல்

ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் ஒளிப்படக் கலைஞர் தானிஷ் சித்திக் (41) தலிபான் தாக்குதலில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

அமைச்சர் கட்டுப்பாட்டில் புதுச்சேரி ஆட்சி உள்ளதா? - நாராயணசாமி கேள்வி

முதலமைச்சர் கட்டுப்பாட்டில் புதுச்சேரி ஆட்சி உள்ளதா அல்லது அமைச்சர் கட்டுப்பாட்டில் இந்த ஆட்சி உள்ளதா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பாகுபாட்டுக்கு எதிராகச் சட்டம் இயற்ற வேண்டும் - சசி தரூர்

கல்வி நிலையங்கள், பணியிடங்களில் மதம், மொழி, இனம், சாதி, பாலினம் ஆகிய பாகுபாட்டுக்கு எதிராக மாநில அளவிலான சட்டம் இயற்ற வேண்டும் என காங்கிரஸ் மூத்தத் தலைவர் சசி தரூர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் ‘வாடிவாசல்’

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் டைட்டில் லுக் இன்று (ஜூலை 16) வெளியாகியுள்ளது.

அமமுக, அதிமுகவினருக்கு வலைவிரிக்கும் முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தனது ஆதரவாளர்களை திமுகவில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

17 பேருடன் சென்ற ரஷ்ய பயணிகள் விமானம் சைபீரியாவில் மாயம்!

17 பேருடன் சென்ற ரஷ்ய பயணிகள் விமானம் சைபீரியா அருகே காணாமல்போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒன்றிய அரசா, மத்திய அரசா? குழம்பிய கே.என். நேரு

முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து, அனைத்திலும் ஒன்றிய அரசு என்றே மத்திய அரசை குறிப்பிடுகிறது திமுக. இந்நிலையில் அமைச்சர் கே.என். நேரு, செய்தியாளர்களிடம் பேசியபோது, முதலில் மத்திய அரசு எனப் பேசிவிட்டு, சட்டென அதைத் திருத்தி ஒன்றிய அரசு என்றார்

யூ-ட்யூபில் புதிய சாதனைப் படைத்த 'கேஜிஎஃப் 2'

'கேஜிஎஃப் 2' படத்தின் டீசர் யூ-ட்யூப் தளத்தில் 80 லட்சம் லைக்குகளைக் கடந்து சாதனை படைத்துவருகிறது.

'வரும் தேர்தலில் 150 இடங்களில் பாஜக வென்று ஆட்சிக் கட்டிலில் அமரும்!'

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 150 இடங்களில் பாஜக வெற்றிபெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தயார் நிலையில் உள்ள 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள்!

12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தயார் நிலையில் உள்ளதாகவும், முதலமைச்சர் அனுமதி அளித்தவுடன் அவை வெளியிடப்படும் எனவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Last Updated : Jul 16, 2021, 7:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.