ETV Bharat / state

5 மணிச் செய்தி சுருக்கம் TOP 10 NEWS 5 PM

ஈடிவி பாரத்தின் 5 மணிச் செய்தி சுருக்கம்

top-10-news-5-pm
top-10-news-5-pm
author img

By

Published : Jul 11, 2021, 5:51 PM IST

1.விதிமுறைகளை மீறி பேருந்து பயணம்: பயணிகளுக்கு கரோனா பரிசோதனை!

பேருந்துகளில் சமூக இடைவெளியின்றியும் முகக் கவசம் அணியாமலும் விதிமுறைகளை மீறி பயணித்த பயணிகளுக்கு பேருந்துகளிலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

2.மாற்றுத்திறனாளிகள் சாட்சியம் தாழ்ந்ததல்ல - சென்னை உயர் நீதிமன்றம்

சராசரி மனிதனின் சாட்சியத்தைவிட, மாற்றுத்திறனாளிகளின் சாட்சியம் எந்த வகையிலும் தரம் தாழ்ந்தது இல்லை எனக் கூறி பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

3.தென்மேற்கு பருவக்காற்று: நீலகிரி, கோயம்புத்தூரில் மிக கனமழை பெய்யும்

தென்மேற்கு பருவவக்காற்று காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4.புதிய மருத்துவக்கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை: ஒன்றிய அரசுக்கு கோரிக்கை!

புதிதாக கட்டப்பட்டு வரும் 11 அரசு மருத்துவமனைக் கல்லூரிகளில், நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

5.புதிய மக்கள் தொகை கொள்கை - உத்தரப் பிரதேச அரசு வெளியீடு

அடுத்த பத்தாண்டுகளுக்கான புதிய மக்கள் தொகை கொள்கையை உத்தரப் பிரதேச அரசு வெளியிட்டுள்ளது.

6.இன்ஸ்டாகிராம் தோழிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய சிறுவன் கைது

இன்ஸ்டாகிராமில் பள்ளி மாணவிக்கு ஆபாசமாக குறுஞ்செய்திகள் (மெசேஜ்) அனுப்பிய 18 வயது சிறுவனைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

7.புதுச்சேரியில் புதிதாக 145 பேருக்கு கரோனா!

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 145 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 1,505 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

8.இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 20% உயர்வு

மே மாதப் புள்ளிவிவரப்படி இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 20 விழுக்காடு உயர்ந்துள்ளதாக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

9.'கிரிக்கெட் டூ கிராண்ட்ஸ்லாம்' விம்பிள்டனை கைப்பற்றிய ஆஷ்லே பார்ட்டி

ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி விம்பிள்டன் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

10.25 years of காதல் கோட்டை: மறக்க முடியாத சூர்யா - கமலி

காதல் கோட்டை திரைப்படம் வந்து நாளையோடு 25 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.