ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திகள் Top 10 news @ 5 pm - ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திகள் Top 10 news @ 5 pm
TOP 10 NEWS 5 PM
author img

By

Published : Jan 2, 2021, 5:10 PM IST

1. 'என்னை மிரட்டாதீர்கள்?' - ஸ்டாலினை நோக்கி கேள்விக் கணைகளைத் தொடுத்த பெண்!

கோயம்புத்தூர்: தேவராயபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பெண் ஒருவர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.

2.அம்மா நீங்க யாரு... வேலுமணி அனுப்பிய ஆளா? - ஸ்டாலினின் பதிலடியால் பரபரப்பு

கோயம்புத்தூர் மாவட்டம் தேவராயபுரத்தில் நடந்த திமுக மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் ஸ்டாலினிடம் பெண் ஒருவர் கேள்வி எழுப்பி சலசலப்பை ஏற்படுத்தினார். அப்பெண் ஸ்டாலினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்பெண் அதிமுகவைச் சேர்ந்தவர் என்று ஸ்டாலின் கூறினார்.

3.நான் ரெடி நீங்க ரெடியா? - அமைச்சர் வேலுமணிக்கு ஸ்டாலின் பதிலடி

கோயம்புத்தூர்: ஊழலை நிரூபிக்காவிட்டால் அரசியலை விட்டு விலகிவிடுவாரா என அமைச்சர் வேலுமணி கேட்கின்றார் என்றும் நான் ரெடி நீங்க ரெடியா என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

4.கரோனா விதிகளை மீறிய வீரர்களைத் தனிமைப்படுத்தியது பிசிசிஐ!

மெல்போர்ன்: கரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி உணவகத்திற்குச் சென்று, அங்குள்ள ரசிகர்களிடம் நெருங்கிப் பழகியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இந்திய வீரர்களை பிசிசிஐ தனிமைப்படுத்தியுள்ளது.

5.ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் 8 பேர் காயம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் எட்டு பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

6.'ஒருநாளில் 100 பேருக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகை'

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று நடைபெற்றுவருகிறது. தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் 17 இடங்களில் இந்த ஒத்திகை நடைபெறும் என ஏற்கெனவே சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.

7.'அன்னை தெரசா உயிருடன் இருந்திருந்தால் முதலமைச்சரை வாழ்த்தியிருப்பார்' - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

ராமநாதபுரம்: அன்னை தெரசா உயிருடன் இருந்திருந்தால் முதலமைச்சர் பழனிசாமியை வாழ்த்தி இருப்பார் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பெருமிதம் தெரிவித்தார்.

8.தேவேந்திர குல வேளாளர்; 30 நாட்களுக்குள் தீர்வு! - முதலமைச்சர் உறுதி!

ராமநாதபுரம்: ஏழு உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்கக்கோரிய பரிந்துரை மத்திய அரசிடம் உள்ளது என்றும், இன்னும் 30 நாட்களுக்குள் அப்பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

9.'முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்' - ஜி.கே. வாசன்

திருநெல்வேலி: முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியைத்தான் ஆதரிப்போம் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

10.வாவ்!! இது வேற லெவல்! - தனுஷ் பகிர்ந்த ஆயிரத்தில் ஒருவன் 2 பட போஸ்டர்

ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் ஃபேன் மேடு போஸ்டரை நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.