ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM - etv bharat 3 PM news

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-3pm
top-10-news-3pm
author img

By

Published : Jul 20, 2020, 3:01 PM IST

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து; சுமார் 13,500 பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 10,399 கோடி ரூபாயில் தொழில்கள் தொடங்க முதலமைச்சர் முன்னிலையில் எட்டு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளன. இதனால் சுமார் 13,507 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கோயில் திருவிழாக்கள் நடத்துவதற்கான வழிமுறைகள் வெளியீடு!

சென்னை: கோயில்களில் திருவிழாக்கள் நடத்துதல் நெறிமுறைகள் தொடர்பான சுற்றறிக்கையை தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை அனைத்து சார் நிலை அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ளது.

'அறப்போர்க் களத்தைக் கட்டியமைப்போம்; அக்கப்போர்க் களத்தைப் புறக்கணிப்போம்' - ஸ்டாலின் கடிதம்

அரசியலமைப்பு உரிமைகள் பறிபோகும் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி காலம் இது என்பதால், கருத்துரிமைகளைப் பாதுகாக்க அறப்போர்க் களத்தைக் கட்டியமைக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

பெரியார் சிலைக்கு காவி சாயம்; இந்து மக்கள் கட்சி தொண்டரை அலேக்காக தூக்கிய போலீஸ்!

ஈரோடு: பெரியார் சிலைக்கு காவி சாயம் பூச முயன்ற இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவரைக் காவல் துறையினர் தடுத்துநிறுத்தி கைதுசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்: ஆளுநர் உரை ஒத்திவைப்பு!

புதுச்சேரி: பட்ஜெட் கூட்டத்தொடரில், ஆளுநர் உரையைத் தற்காலிகமாக ஒத்திவைத்த சபாநாயகர் சிவக்கொழுந்து, அவை மீண்டும் கூட்டப்பட்டு 12 மணிக்கு மேல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

'சமூக வலைதளங்களில் இழிவுபடுத்துவோரை தண்டிக்க வேண்டும்' - வைகோ

தென்காசி: ஊரடங்கால் வருமானமின்றி சீட்டுப் பணம் செலுத்த இயலாத பெண்ணைப் பணம் செலுத்தச் சொல்லி தொடர்ந்து கட்டாயப்படுத்திவந்த நபர், அப்பெண்ணை அரிவாளால் கொடூரமாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'ஆன்லைன் வகுப்புகள் குறித்து தமிழ்நாடு அரசின் நிலை என்ன?' - உயர் நீதிமன்றம்

சென்னை: ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ள நிலையில், அதன் மீதான அரசின் நிலைப்பாடு குறித்து பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அப்போ விஜய்க்கு... இப்போ விஜய் சேதுபதிக்கு - ஆல்பம் உருவாக்கும் ஸ்ரீதர் மாஸ்டர்

சென்னை: நடிகர் விஜய் சேதுபதிக்கு 'அண்ணே வெயிட்டு வெயிட்டு' என்னும் ஆல்பம் ஒன்றை டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் உருவாக்கவுள்ளார்.

தீவிரமடையும் கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 1.46 கோடியாக உயர்வு!

உலகம் முழுவதும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 46 லட்சத்து 47 ஆயிரத்து 584ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கரோனா உயிரிழப்பு விகிதம் 2.5 விழுக்காட்டுக்கு கீழாக குறைவு!

இந்தியாவில் கரோனா உயிரிழப்பு விகிதம் 2.82லிருந்து 2,49ஆக குறைந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.