ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-3pm
top-10-news-3pm
author img

By

Published : Jul 19, 2020, 3:10 PM IST

முதலமைச்சரைத் தொடர்புகொண்ட பிரதமர்: காரணம் இதுதான்?

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கரோனா அதிவேகமாகப் பரவிவரும் சூழலில், பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

“ஷாக் அடிப்பது மின்சாரமா? மின்கட்டணமா திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

சென்னை: கரோனா தொற்று ஏற்பட்டால் பொதுமக்கள் எந்த அளவுக்கு அதிர்ச்சி அடைவார்களோ, அதைவிட அதிகமாக மின்கட்டணத்தை பார்த்து அதிர்ச்சி அடைவதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரை ஆவின் முறைகேடு: முக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சருக்கு கடிதம்!

சென்னை: மதுரை ஆவின் கூட்டுறவு சங்கத்தில் நடந்த முறைகேட்டில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு பால் முகவர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் துணை ஆணையர் உள்பட 16 காவலர்களுக்கு கரோனா

சென்னை: மயிலாப்பூர் காவல் மாவட்ட துணை ஆணையருக்கு மீண்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் மேலும் 15 காவலர்களுக்கு நேற்று (ஜூலை 18) கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

நீட் தேர்வுக்கு நீதி கிடைக்கவில்லை - பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: நீட் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனைவரும் ஓய்வு பெற்று விட்டனர். ஆனால் இந்த வழக்கிற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஆவடி அருகே கோழித் தகராறில் நிகழ்ந்த கொலை!

சென்னை: ஆவடி அருகே கோழித் தகராறில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொலை செய்யபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிவாரணத்தில் ஊழல்... பாஜக-திரிணாமுல் காங். மோதல்; பெட்ரோல் குண்டுகள், கற்கள் வீச்சு!

கொல்கத்தா: ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து ஆளுங்கட்சியை எதிர்த்து பாஜக எம்பி அர்ஜுன் சிங் தலைமையில் நடைபெற்ற பேரணியில், இரு கட்சித் தொண்டர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இம்மோதலில் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

குதிரை பேர ஆடியோ விவகாரம்: சிபிஐ விசாரணை கோரும் அபிஷேக் மனு சிங்வி!

டெல்லி: ராஜஸ்தான் குதிரை பேர ஆடியோ விவகாரத்தில் சிபிஐ விசாரணையால் மட்டுமே உண்மையை வெளிக்கொண்டுவர முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறியுள்ளார்.

கங்குபாய் கத்தியவாடி - கரோனா சூழலால் காதல் காட்சிகள் கட்!

அலியா பாட் நடிப்பில் உருவாகிவரும் ‘கங்குபாய் கத்தியவாடி’ படத்தில் கரோனா சூழல் காரணமாக நெருக்கமான காட்சிகளைக் தவிர்க்க அதன் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி முடிவு செய்துள்ளார்.

சுஷாந்த் சிங் காதலிக்கு கொலை மிரட்டல் - இருவர் மீது வழக்குப்பதிவு

நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.