ETV Bharat / state

3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 3 PM - சென்னை மாவட்ட செய்திகள்

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ.

3 மணி செய்திச்சுருக்கம்
3 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : May 31, 2021, 3:09 PM IST

1. சென்னையில் நடமாடும் மளிகைக் கடை திட்டம்... களத்தில் 2,197 விற்பனையாளர்கள்!

சென்னை மாநகராட்சியில் மளிகைப் பொருள்களை வாகனங்களில் சென்று விற்பனை செய்ய 2,197 விற்பனையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2. மாணவிக்குப் பாலியல் தொல்லை: கராத்தே பயிற்சியாளர் கெபி ராஜ் கைது!

சென்னை: பயிற்சி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கராத்தே பயிற்சியாளர் கெபி ராஜ் கைது செய்யப்பட்டார்.

3. கரோனா: கரூரில் ஒரு மாதத்தில் 140 பேர் உயிரிழப்பு!

கரூர் மாவட்டத்தில், கடந்த 30 நாள்களில் 9,387 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மாதத்தில் மட்டும் 140 பேர் உயிரிழந்துள்ளனர்.

4. ஸ்டெர்லைட் ஆலை: இரண்டாம் அலகில் ஆக்சிஜன் உற்பத்தி சோதனை ஓட்டம் தொடக்கம்!

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாம் அலகில் இன்று(மே.31) முதல் நான்கு நாள்களுக்கு சோதனை முறையில் ஆக்சிஜன் உற்பத்தி நடைபெறுகிறது.

5. சசிகலா செல்போன் அழைப்பால் உற்சாகமான தொண்டர்!

தஞ்சாவூர்: சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியால் மனமுடைந்த நிலையில் இருந்த அதிமுக தொண்டரை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு சசிகலா ஆறுதல் தெரிவித்தார்.

6. தலைமைச் செயலாளரை அழைத்த மத்திய அரசு... அனுப்ப அடம்பிடிக்கும் மம்தா!

கொல்கத்தா: மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தலைமைச் செயலாளரை நிச்சயம் விடுவிக்க முடியாது என, முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

7. லட்சத்தீவு நிர்வாகியைத் திரும்பப் பெறக்கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்!

திருவனந்தபுரம்: லட்சத்தீவு நிர்வாகியைத் திரும்பப் பெறக்கோரி, கேரள சட்டப்பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

8. மும்பையில் சதத்தைத் தொட்ட பெட்ரோல் விலை!

மும்பையில் இன்று (மே.31) பெட்ரோல் லிட்டருக்கு 100. 47 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

9. கறுப்பு பூஞ்சை: புதுச்சேரியில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கறுப்பு பூஞ்சை நோய் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த பெண் உயிரிழந்தார்.

10. இந்தியாவில் சரிவைச் சந்தித்துவரும் கரோனா பாதிப்பு!

இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.