ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-3-pm
top-10-news-3-pm
author img

By

Published : Jul 18, 2020, 3:01 PM IST

சென்னையில் கரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ. 400 கோடி செலவு - மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: ஊரடங்கு தொடங்கியது முதல் இன்று வரை சென்னையில் சுமார் 400 கோடி ரூபாய் மாநகராட்சி செலவு செய்துள்ளது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

'ஸ்டாலின் பெயரில் போலி கணக்கு; கறுப்பர் கூட்டத்திற்கு ஆதரவு ட்வீட்' - நீதிமன்றத்திற்குச் செல்லும் திமுக

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு உருவாக்கி, கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு ஆதரவாக ட்வீட் செய்ததற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.

வீடியோ பாடப் பதிவுகளை விரைந்து தயார் செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவு!

சென்னை: தொலைக்காட்சிகளில் பாடத்திட்டங்கள் ஒளிபரப்பு செய்யவிருப்பதால் 1 முதல் 11ஆம் வகுப்பு வரை வீடியோ பாடப் பதிவுகள் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

17 நாள்கள் போராட்டம்... கரோனா நோயாளியை மீட்டெடுத்த அரசு மருத்துவமனை!

புதுக்கோட்டை: 17 நாள்கள் போராடி கரோனா நோயாளி ஒருவரை மருத்துவர்கள் குணப்படுத்தியிருப்பது மிகப்பெரிய சாதனை என ராணியார் அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.

ஹெல்மெட்டில் கஞ்சா கடத்தியபோது விபத்து; இருவர் உயிரிழப்பு

திருப்பூர்: ஹெல்மெட்டில் கஞ்சா கடத்தியபோது, பல்லடம் தாராபுரம் சாலையில் இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

'இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் தாராள வர்த்தக ஒப்பந்தம் தற்போதைக்கு சாத்தியமில்லை' - நிபுணர்கள் கருத்து

இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தாராள வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் சென்றாலும், தற்போதைக்கு அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது சாத்தியமற்ற ஒன்று என நிபுணர்கள் கருதுகின்றனர்.

காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் அருகேயுள்ள அம்ஷிபோரா பகுதியில், ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று காலை ஏற்பட்ட மோதலில் பயங்கரவாதிகள் மூவர் கொல்லப்பட்டனர்.

பெரியார் சிலை அவமதிப்பு - ராகுல் காந்தி தமிழில் ட்வீட்

டெல்லி: "எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது" என பெரியார் சிலை அவமதிப்பு குறித்து ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

பீகார் வெள்ளம்: தீவுபோல் காட்சியளிக்கும் கிராமம்!

பாட்னா: பீகார் மாநிலம் சேம்பரான் மாவட்டத்திலுள்ள மங்கள்பூர் கலா கிராமத்திற்குள் வெள்ள நீர் புகுந்ததால் ஊரே தீவு போல் காட்சியளிக்கிறது.

ஒலிம்பிக் தொடருக்கான ஹாக்கி அட்டவணை: முதல் போட்டியில் நியூசி.யை எதிர்கொள்ளும் இந்தியா!

2020ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.