சரிவைச் சந்திக்கும் கரோனா - குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
கரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 65,553 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு லட்சத்து 76,309 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், இந்தியாவில் கரோனா தொற்று சரிவைச் சந்தித்து வருகிறது.
பழங்குடியினப் பள்ளியில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!
ஒட்டாவா: கனடா நாட்டின் கம்லூப்ஸில் உள்ள மூடப்பட்ட பழங்குடியினப் பள்ளியில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையின் 2ஆம் அலகில் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம்!
தூத்துக்குடி: சிப்காட்டில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் 2ஆம் அலகில் இன்று(மே.30) முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கி உள்ளது.
மூன்று மாவட்டங்களில் முதலமைச்சர் இன்று ஆய்வு!
கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே.30) நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.
பாலியல் புகார்களுக்கு ரகசிய விசாரணை : காவல் ஆணையர் உறுதி
பாலியல் புகார் தெரிவிக்கும் மாணவிகளின் வீட்டிற்கே சென்று காவல்துறை ரகசிய விசாரணை மேற்கொள்ளும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
'மான் கி பாத்' நிகழ்வில் பிரதமர் உரை!
மனதின் குரல்' (மான் கி பாத்) நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார்.
தமிழ்நாட்டில் ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!
வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆ.ராசாவின் மனைவிக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
பெரம்பலூர்: திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ. ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடலுக்கு சட்டப் பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தொடரும் புகார்கள்: ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் மூன்று மாணவிகள் புகார்
சென்னை: பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரத்தில் ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் மூன்று மாணவிகள் முறைப்படி புகார் அளித்துள்ளனர்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள்: தொலைபேசி மூலம் தகவல்கள் அறியும் மாநகராட்சி!
சென்னை: வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்குத் தொலைபேசி மூலம் உடல்நிலை குறித்து தகவல்கள் பெறப்பட்டு வருவதாக, சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது