ETV Bharat / state

மதியம் 1 மணி செய்தி சுருக்கம் - TOP 10 NEWS 1 PM - மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்...

மதியம் 1 மணி செய்தி சுருக்கம் - TOP 10 NEWS 1 PM

author img

By

Published : May 18, 2021, 1:15 PM IST

1. புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரண நிதி - முதலமைச்சர் அறிவிப்பு

புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2. தமிழ்நாட்டிலேயே தடுப்பூசி உற்பத்தி - முதலமைச்சர் ஸ்டாலின்

ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், நிரந்தரத் தீர்வாக தமிழ்நாட்டிலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களைத் துவக்க முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

3. 'குறையும் பாதிப்பு..அதிகரிக்கும் மரணங்கள்'

நேற்று(மே.17) ஒரே நாளில் இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 533 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

4. காவல் துறை சரகத்தில் இருந்து வெளியே செல்ல தடை - கடுமையாகும் கட்டுப்பாடுகள்

சென்னை காவல்துறையினர் இன்று முதல் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

5. இ-பதிவில் மீண்டும் திருமண பிரிவு சேர்ப்பு!

தமிழ்நாடு அரசின் இ-பதிவு இணையதளத்தில் திருணத்திற்கான பதிவு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

6. உண்டியல் பணத்தை நிவாரண நிதியாக அளித்த 5 வயது சிறுவன்!

ஐந்து வயது சிறுவன் தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார்.

7. கணவரை இழந்த பெண் கடத்தல் : கடத்தலுக்கு உதவிய மூவர் கைது!

சென்னை: கணவரை இழந்த பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்தவர் கைது செய்யப்பட்ட நிலையில், கடத்தலுக்கு உதவிய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

8. மனித மூளை திசுக்களை வளர்க்கும் ஐ.ஐ.டி மெட்ராஸ் & எம்ஐடி விஞ்ஞானிகள்!

அல்சைமர், பார்கின்சன் போன்ற புற்றுநோய்களுக்கான சிகிச்சை கண்டுபிடிப்புகளை துரிதப்படுத்துவதற்காக மூளை திசுக்கள் வளர்க்கப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

9. கி.ரா-வுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!

மறைந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணனுக்கு துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

10. 'டவ்-தே' புயலால் நடுக்கடலில் சிக்கிய 400 பேர் - மீட்பு பணி தீவிரம்!

மும்பை: நடுக்கடலில் 400 பயணிகளுடன் இரண்டு படகுகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில், இந்திய கடற்படையின் போர்க் கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.