கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (25), கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா தனலட்சுமி நகரைச் சேர்ந்த சிவராஜ் (31) ஆகியோர் இடைத்தரகர்கள் மூலம் தலா ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து முறைகேடு செய்து தேர்ச்சிப்பெற்ற இருவரையும் சிபிசிஐடி காவல் துறையினர் இன்று கைதுசெய்துள்ளனர்.
குரூப் 4 தரவரிசைப்பட்டியல் வெளியானபோது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேஸ்வரம் மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அதிக அளவில் 100 இடங்களில் வந்து முறைகேடு குறித்த புகாரின்பேரில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இதுவரை முறைகேடு செய்ததாக 12 பேரை காவல் துறையினர் கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு - திடுக்கிடும் தகவல்கள், 3 பேர் கைது!