ETV Bharat / state

நாளை ‘குரூப் - 2' தேர்வு: 11.78 லட்சம் பேர் பங்கேற்பு! - நாளை நடக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு குறித்த முழு விவரம்

தமிழ்நாட்டில் ‘குரூப் - 2' தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்வில் 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ளனர்.

நாளை ‘குரூப் - 2' தேர்வு 11.78 லட்சம் பேர் பங்கேற்பு

author img

By

Published : May 20, 2022, 11:01 PM IST

சென்னை: அரசு துறைகளில், சார் பதிவாளர், நகராட்சி கமிஷனர் உள்பட 'குரூப் - 2, 2ஏ’ பிரிவுகளில், 5,529 காலியிடங்களை நிரப்ப, அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், முதல் நிலைத் தேர்வு நாளை நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு, 6.82 லட்சம் பெண்கள் உள்பட, 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தமிழ் வழியில் படித்த, 80 ஆயிரம் பேர் இதில் அடங்குவர்.

பொது தமிழ்ப் பிரிவை,9.47லட்சம் பேரும்,பொது ஆங்கிலம் பிரிவை 2.31 லட்சம் பேரும் தேர்வு செய்துள்ளனர். அவர்களுக்கு அதற்கான வினாத்தாள் வழங்கப்படும். தேர்வு எழுத, 38 மாவட்டங்களில், 4,012 தேர்வுமையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குளறுபடி இன்றி தேர்வு நடத்த 323 பறக்கும் படைகள், 6ஆயிரத்து 400 ஆய்வு குழுக்கள், 4ஆயிரத்து 12 வீடியோ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் 1.15 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். மதுரை, 64ஆயிரத்து 85, சேலம் 63ஆயிரத்து 437, திருச்சி 50ஆயிரத்து 19, கோயம்புத்தூர் 48ஆயிரத்து 39 பேர் தேர்வு எழுதுகின்றனர். ஜூன் இறுதியில் தேர்வு முடிவு வெளியிடப்படும். அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவோரில், ஒரு பதவிக்கு 10 பேர் வீதம் 5ஆயிரத்து 529 பதவிகளுக்கு 55ஆயிரத்து 290 பேர் செப்டம்பரில் நடக்கும் பிரதான தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

விதிமுறைகள்: காலை 9:30 மணிக்கு தொடங்கி பகல் 12:30க்கு தேர்வு முடியும். கையெழுத்திடுவது போன்ற நடைமுறைக்காக, கூடுதலாக 15 நிமிடங்கள் தேர்வறையில் இருக்க வேண்டும். காலை 8:30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வந்துவிட வேண்டும்; அதிகபட்சமாக காலை 8:59 மணி வரையில் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர்.

தேர்விற்கு வருபவர்கள் ஹால் டிக்கெட்டுடன் ஆதார், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை என ஏதாவது ஒன்றின் பிரதி மற்றும் அசல் எடுத்து வர வேண்டும். இந்த தேர்வுக்கு கறுப்பு நிற, ‘பால் பாய்ண்ட்’ பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'இனி சைலன்டாக வெளியேறலாம்' - வாட்ஸ்-அப்பின் புதிய அப்டேட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.