ETV Bharat / state

குரூப்-1 முதன்மைத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு! - HALL TICKET

சென்னை: குரூப் -1 பணியில் சேர்வதற்கு தகுதியானவர்களுக்கான முதன்மைத் தேர்வு வருகின்ற ஜூலை 12, 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

குரூப்-1 முதன்மைத் தேர்வு
author img

By

Published : Jul 1, 2019, 8:35 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் குரூப் -1 பிரிவில் காலியாக உள்ள 181 பணியிடங்களுக்கு மார்ச் 3ஆம் தேதி முதல் நிலைத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 1,68,549 விண்ணப்பதாரர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், முதல்நிலைத் தேர்வில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 9,850 பேருக்கு முதன்மைத் தேர்வு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் சுதன் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குருப்- I முதன்மைத்தேர்வு வரும் ஜூலை 12, 13, 14 ஆகிய தேதிகளில் சென்னை தேர்வு மையத்தில் உள்ள 95 தேர்வுக்கூடங்களில் நடைபெறுகிறது. முதன்மைத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in, www.tnpscexams.net-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்வது குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், அல்லது contacttnpsc@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

181 காலியிடங்களுக்கான பணிகள்

  • துணை ஆட்சியர்
  • காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்,
  • வணிக வரித்துறை உதவி ஆணையர்,
  • கூட்டுறவு சங்கங்களின் துணைபதிவாளர்,
  • மாவட்டப் பதிவாளர்,
  • ஊரகவளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர்,
  • மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,
  • தீயணைப்பு, மீட்புத் துறையின் மாவட்ட அலுவலர்

Intro:குருப் 1 முதன்மைத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு Body:

சென்னை,

குருப் 1 பணியில் சேர்வதற்கு தகுதியானவர்களுக்கான முதன்மைத் தேர்வு வரும் 12,13,14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
துணை ஆட்சியர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைபதிவாளர், மாவட்டப் பதிவாளர், ஊரகவளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மாவட்ட அலுவலர் ஆகிய பதவிகளுக்கான 181 காலிப்பணியிடங்களுக்கு, 3. 3.2019 அன்று நடைபெற்ற முதனிலைத் தேர்விலும் பின்பற்றப்பட்டுள்ளது. அதில் கலந்து கொண்ட 1,68,549 விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில்,முதன்மை தேர்வுக்கு தற்காலிகமாக 9850 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது.

இது குறித்து அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குருப் I முதன்மைத்தேர்வு வரும் 12.7.2019, 13.7.2019 மற்றும் 14. 7.2019 ஆகிய நாட்களில் முற்பகல் மட்டும் சென்னை தேர்வு மையத்தில் உள்ள 95 தேர்வுக்கூடங்களில் நடைபெற உள்ளது.

முதன்மைத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்வது குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம் என அதில் கூறியுள்ளார். Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.