ஆண்டுதோறும் 35க்கும் மேற்பட்ட தேர்வுகளை அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இதன் மூலம் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் அரசு துறைகளில் நிரப்பப்பட்டு வருகின்றன.
கரோனோ காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை குரூப்-1 தேர்வு, வேளாண்மை துறை தேர்வு, உதவி வரைவு அதிகாரி பணியிடத்திற்கான தேர்வு ஆகிய மூன்று தேர்வுகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.
கோரிக்கை
கரோனோ தொற்று குறைந்து வரக்கூடிய நிலையில், இந்த ஆண்டு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் குறித்த அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆலோசனை கூட்டம்
அதன் அடிப்படையில் அரசு பணியாளர் தேர்வாணையம் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதில் பணியாளர் தேர்வாணைய தலைவர், செயலாளர் தேர்வு கட்டுப்பாட்டு துறை அலுவலர், உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் குரூப் 2, குரூப் 2ஏ ,குரூப் 4 ஆகிய முக்கிய தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
அறிவிப்பு
இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து அடுத்த சில தினங்களில் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள தேர்வுகள் குறித்த அறிவிப்பு, காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க :மருத்துவ படிப்பில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்