சென்னை ஆவடி நகரத்துக்குட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் அதிமுகவின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவை அமைச்சர் மாஃபாபாண்டியராஜன், நாடாளுமன்ற வேட்பாளர் வேணுகோபால் ஆகியோர் திறந்து வைத்தனர். இதன்பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், ஆவடி பெருநகராட்சி அடுத்த மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்த வாய்ப்பு இருப்பதாகக் கூறினார்.
இதனைத்தொடர்ந்து திறந்த வேனில் பரப்புரையை ஆவடி என்.எப்.ரோட்டில் தொடங்கி திருமுலை ராஜாபுரம், கன்னிகாபுரம் ஆகிய பகுதிகளுக்கு வீதி வீதியாகச் சென்று அதிமுக சார்பில் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்துஇரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.
இவர்களுடன் ஆவடி நகர செயலாளர் தீனதயாளன், புரட்சி பாரதம் மாநில இணைச் செயலாளர் பலராமன், ஆவடி நகர செயலாளர் பீரிஸ் பன்னிர், தேமுதிக நகர செயலாளர் சங்கர் மற்றும் அனைத்துக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.