இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "2012-2013-ஆம் ஆண்டிலிருந்து ஆதி திராவிடர், பழங்குடியினர், கிருத்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் ஆகியோரின் ஈமச்சடங்கிற்காக வழங்கப்படும் மானியத்தொகை ரூ.2,500-ஐ பெறுவதற்கான இறந்தவரின் குடும்ப வருமான வரம்பு, கிராமப்புறங்களில் ரூ.40,000- எனவும், நகர்புறங்களில் ரூ. 60,000- எனவும் நிர்ணயித்து ஆணை வெளியிடப்பட்டது.
இவர்களது ஈமச்சடங்கிற்காக வழங்கப்படும் உதவித்தொகையினை ரூ.2,500-லிருந்து ரூ. 10,000-ஆக உயர்த்தி ஆணை வழங்க ஆதி திராவிடர் நல இயக்குநர் அரசை கோரியிருந்தார்.
இந்நிலையில் ஆதி திராவிடர், பழங்குடியினர், கிருத்துவ மதம் மாறி ஆதி திராவிடர் இனத்தவர்களின் ஈமச்சடங்கிற்கு வழங்கப்படும் தொகையை ரூ.2,500-லிருந்து ரூ. 5,000-ஆக உயர்த்தியும், இத்தொகையை பெறுவதற்கு ஏதுவாக இறந்தவரின் குடும்ப ஆண்டு வருமான வரம்புத் தொகையை ரூ. 72, 000- ஆக உயர்த்தியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணை வெளியிட்டுள்ளார்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவ காப்பீடு திட்டத்தில் கூடுதலாக 133 மருத்துவமனைகள்!