சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் வழிபாட்டுத் தலங்கள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், தர்காக்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். அர்ச்சனை, திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி!