ETV Bharat / state

சின்னத்திரை படப்பிடிப்பை தொடர நிபந்தனைகளுடன் அனுமதி - முதலமைச்சர் பழனிசாமி - முதலமைச்சர் பழனிசாமி

சென்னை: நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பை தொடங்க தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி அனுமதியளித்துள்ளார்.

Palaniswami
Palaniswami
author img

By

Published : May 21, 2020, 12:24 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமியிடம் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI), தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் (STEPS) சார்பில், சின்னத்திரை படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில் சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பை தொடங்க பழனிசாமி அனுமதியளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு கூறிய நிபந்தனைகள் இதோ:

• சுற்றுச்சுவர் உள்ள வீடுகளுக்கு உள்ளே அல்லது அரங்கிற்குள் மட்டும் (Indoor shooting only) படப்பிடிப்பு நடத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு இது பொருந்தாது.

• பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது. எனினும், ஊரகப் பகுதிகளில் (தடை செய்யப்பட்ட பகுதிகளைத் Except containment zone) பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த தடை ஏதும் இல்லை.

• பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.

• படப்பிடிப்பு நடத்தப்படும் அரங்கம் அல்லது வீட்டினை படப்பிடிப்பிற்கு முன்பும், பின்பும் கண்டிப்பாக கிருமி நாசினியால் (Disinfectant) சுத்தம் செய்ய வேண்டும்.

• படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகர்கள், நடிகைகள் தவிர மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். நடிகர், நடிகைகளும் படப்பிடிப்பின் இடைவெளியின்பொழுது தவறாமல் முகக்கவசம் அணியவேண்டும்.

• படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

• படப்பிடிப்பு நடத்தப்படும் வளாகத்திற்குள் வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். அதேபோன்று, படப்பிடிப்பிற்கு உபயோகப்படுத்தப்படும் கேமரா, கிரேன் உள்பட அனைத்து சாதனங்களையும் கிருமி நாசினி கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

• சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருக்கும் கலைஞர்களையோ அல்லது தொழில்நுட்ப பணியாளர்களையோ படப்பிடிப்பு வளாகங்களுக்குள் அனுமதிக்கக்கூடாது. இத்தகைய அறிகுறிகள் உள்ளவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.

• அதிகபட்சமாக நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட 20 எண்ணிக்கைகளுக்கு மிகாமல் படப்பிடிப்பு நடத்தலாம்.

• சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

• மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

படப்பிடிப்புக்கு வருகை தரும் அனைவரும் மேற்கண்ட நிபந்தனைகளை தவறாமல் கடைப்பிடிப்பதை, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் உறுதி செய்து கொண்டு, படப்பிடிப்பு நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.