இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும். குறிப்பாக, அண்டை மாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு இ- பாஸ் பெற்ற பின்னரே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திராவில் இயங்கும் தனியார் ஜப்பான் நிறுவனத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணி செய்துவருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கு காரணமாக முடங்கியுள்ள தமிழ்நாடு தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு செல்வதற்கான இ- பாஸ் அனுமதியை, சென்னையில் உள்ள ஜப்பான் துணை தூதரகத்திடமிருந்தும், தனிப்பட்ட ஜப்பானிய நிறுவனங்களிடமிருந்தும் ஒரு கோரிக்கையாகப் பெற்றதாகத் தொழில்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஜப்பானிய நிறுவனங்களைத் தவிர, தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் வரையிலான தொழில்துறையில் தொழிலாளர்களின் இடைநிலை இயக்கத்தையும் அப்பல்லோ டயர்கள் கோரியுள்ளன.
இதனால் தமிழ்நாட்டிலிருக்கும் ஊழியர்களை மாநிலங்களுக்கு இடையில் நகர்த்துவதற்கு ஆந்திர அரசு சித்தூர் மற்றும் நெல்லூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, ஆந்திரா, தமிழ்நாட்டிலிருந்து நாள்தோறும் வேலையின் பொருட்டு பயணிக்க அனுமதி கிடைத்துள்ளது. ஒவ்வொரு நிறுவனத்தின் விண்ணப்பதாரருக்கும் ஒரு மாதம் வரை செல்லுபடியாகும் இ-பாஸ் வழங்கப்படும். தேவைப்பட்டால் ஒரு மாதத்திற்குப் பிறகு பாஸ் நீட்டிப்புக்கு நிறுவனம் விண்ணப்பிக்கலாம்.
இந்த கோரிக்கைக்கு நிறுவனம் மட்டுமே விண்ணப்பதாரராக இருக்க வேண்டும், எந்தவொரு தனிப்பட்ட ஊழியர்களுக்கு அனுமதி இல்லை. நிறுவன வாகனங்களில் கார்கள் அல்லது பேருந்துகள் வேன்கள் மூலம் பணியாளர்களைக் கொண்டுச் செல்வதற்கான ஏற்பாடுகளை நிறுவனம் செய்ய வேண்டும். இருசக்கர வாகனங்களுக்கு பாஸ் தேவை குறைவாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, கவனமாக பரிசோதித்த பின்னர் நிபந்தனைகளுடன் இ-பாஸை அங்கீகரிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: 'இ-பாஸ் இன்றி வெளிமாவட்டத்திற்கு சென்றால் சட்டப்படி நடவடிக்கை'