மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் புதிதாக 80 ஆயிரத்து 348 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 3 ஆயிரத்து 86 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மாநிலத்தில் இதுவரை 89 லட்சத்து 39 ஆயிரத்து 331 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 6 லட்சத்து 97 ஆயிரத்து 116 நபர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 35 ஆயிரத்து 480 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 ஆயிரத்து 301 நபர்கள் குணமடைந்து இன்று வீட்டுக்கு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 50 ஆயிரத்து 856 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் தனியார் மருத்துவமனைகளில் 18, அரசு மருத்துமனைகளில் 21 என 39 நபர்கள் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 780 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் கணிசமாக குறைந்து வருகிறது.
மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்:
சென்னை - 1,92,527
செங்கல்பட்டு - 41,845
கோயம்புத்தூர் - 40,690
திருவள்ளூர் - 36,510
காஞ்சிபுரம் - 24,664
சேலம் - 25,649
கடலூர் - 22,719
மதுரை - 18,204
திருவண்ணாமலை - 17,213
வேலூர் - 17,279
தேனி - 16,041
விருதுநகர் - 15,220
ராணிப்பேட்டை - 14,609
தூத்துக்குடி - 14,593
கன்னியாகுமரி - 14,470
தஞ்சாவூர் - 14,715
திருநெல்வேலி - 13,977
விழுப்புரம் - 13,293
திருச்சிராப்பள்ளி - 12,045
திருப்பூர் - 11,558
புதுக்கோட்டை - 10,327
கள்ளக்குறிச்சி - 10,049
திண்டுக்கல் - 9,644
திருவாரூர் - 9,188
ஈரோடு - 9,396
தென்காசி - 7,759
நாமக்கல் - 8,349
நாகப்பட்டினம் - 6,369
ராமநாதபுரம் - 5913
திருப்பத்தூர் - 6,251
சிவகங்கை - 5,715
கிருஷ்ணகிரி - 6,179
நீலகிரி - 6,210
தருமபுரி - 5,331
அரியலூர் - 4,295
கரூர் - 3,859
பெரம்பலூர் - 2,087
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 925
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 982
ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க: 13 ரயில்நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் உயர்வு!