ETV Bharat / state

கரோனா நிலவரம்: பாதிப்பு - 5, 242; இறப்பு - 67 - கரோனா பாதிப்பு எண்ணிக்கை தமிழ்நாடு

TN corona status today
கரோனா நிலவரம் இன்று
author img

By

Published : Oct 10, 2020, 6:13 PM IST

Updated : Oct 11, 2020, 3:53 AM IST

18:08 October 10

சென்னை: தமிழ்நாட்டில் சனிக்கிழமை (அக்.10) புதிதாக 5 ஆயிரத்து 242 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஒரேநாளில் 67 நபர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள புள்ளி விபர தகவலில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டிலுள்ள 191 பரிசோதனை மையங்களின் மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில், தமிழ்நாட்டிலிருந்து 5 ஆயிரத்து 234, பிற மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பிய 9 நபர்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 242 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை மாநிலம் முழுவதிலுமிருந்து 82 லட்சத்து 32 ஆயிரத்து 725 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 6 லட்சத்து 5 ஆயிரத்து 370 நபர்கள் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களில் என 44 ஆயிரத்து 150 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 ஆயிரத்து 222 நபர்கள் குணமடைந்து வீட்டுக்கு இன்று திரும்பியுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 லடசத்து 97 ஆயிரத்து 33ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தவர்களில், சிகிச்சை பலனின்றி அக்.10ஆம் தேதி ஒரே நாளில் 67 நபர்கள் இறந்துள்ளனர். இதையடுத்து, மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 187ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கைக்கு சமமான அளவுக்கு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதேபோல் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது வருகிறது.

மேலும், தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களில் நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

மாவட்ட வாரியாக இன்றைய பாதிப்பு நிலவரம்:

சென்னை - 1272
செங்கல்பட்டு - 309
திருவள்ளூர் - 199
மதுரை - 98
காஞ்சிபுரம் - 160
விருதுநகர் - 69
தூத்துக்குடி - 57
திருவண்ணாமலை - 101
வேலூர் - 132
திருநெல்வேலி - 71
தேனி - 71
ராணிப்பேட்டை - 90
கன்னியாகுமரி - 85
கோயம்புத்தூர் - 392
திருச்சிராப்பள்ளி - 84
கள்ளக்குறிச்சி - 42
விழுப்புரம் - 84
சேலம் - 339
ராமநாதபுரம் - 18
கடலூர் - 138
திண்டுக்கல் - 38
தஞ்சாவூர் - 189
சிவகங்கை - 37
தென்காசி - 21
புதுக்கோட்டை - 66
திருவாரூர் - 98
திருப்பத்தூர் - 59
அரியலூர் - 31
கிருஷ்ணகிரி - 83
திருப்பூர் - 183
தருமபுரி - 92
நீலகிரி - 96
ஈரோடு - 161
நாகப்பட்டினம் - 56
நாமக்கல் - 153
கரூர் - 49
பெரம்பலூர் - 17
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இன்னொரு பெருந்தொற்று வரமால் தடுக்க பணியாற்ற வேண்டும் - தலாய் லாமா

Last Updated : Oct 11, 2020, 3:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.