தமிழ்நாட்டில் புதிதாக 2,579 பேருக்கு கரோனா! - தமிழ்நாட்டில் இன்று கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 31) புதிதாக 2,579 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (மார்ச் 31) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 83 ஆயிரத்து 204 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 2,568 நபர்களுக்கும், டெல்லியிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஐந்து நபர்களுக்கும், மேற்கு வங்கத்திலிருந்து வந்த மூன்று பேருக்கும், கர்நாடகாவிலிருந்து வந்த இரண்டு நபர்களுக்கும், ஜார்கண்டிலிருந்து வந்த ஒருவருக்கும் என 2,579 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 92 லட்சத்து 71 ஆயிரத்து 677 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்த எட்டு லட்சத்து 86 ஆயிரத்து 673 நபர்களுக்கு கரோனா தீநுண்மி தொற்று கண்டறியப்பட்டது.
அவர்களில் தற்போது மருத்துவமனை, தனிமைப்படுத்தும் மையங்களில் 15 ஆயிரத்து 879 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்து இன்று (மார்ச் 31) 1,527 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை எட்டு லட்சத்து 56 ஆயிரத்து 548 என உயர்ந்துள்ளது.
அதேபோல் சிகிச்சைப் பலனின்றி 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12,719 உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் புதிதாக 969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டம் வாரியாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை
சென்னை - 2,48,965
கோயம்புத்தூர் - 58,960
செங்கல்பட்டு - 56,330
திருவள்ளூர் - 46,060
சேலம் - 33,488
காஞ்சிபுரம் - 30,584
கடலூர் - 25,706
மதுரை - 21,814
வேலூர் - 21,490
திருவண்ணாமலை - 19,692
திருப்பூர் - 19,324
தஞ்சாவூர் - 19,741
தேனி - 17,299
கன்னியாகுமரி - 17,537
விருதுநகர் - 16,875
தூத்துக்குடி - 16,554
ராணிப்பேட்டை - 16,475
திருநெல்வேலி - 16,092
விழுப்புரம் - 15,507
திருச்சிராப்பள்ளி - 15,615
ஈரோடு - 15,352
புதுக்கோட்டை - 11,874
நாமக்கல் - 12,111
திண்டுக்கல் - 11,880
திருவாரூர் - 12,014
கள்ளக்குறிச்சி - 10,951
தென்காசி - 8,717
நாகப்பட்டினம் - 9,164
நீலகிரி - 8,666
கிருஷ்ணகிரி - 8,468
திருப்பத்தூர் - 7,806
சிவகங்கை - 6,998
ராமநாதபுரம் - 6,554
தர்மபுரி - 6,781
கரூர் - 5,650
அரியலூர் - 4,814
பெரம்பலூர் - 2,307
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 974
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,056
ரயில் மூலம் வந்தவர்கள் - 428