ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 1087 பேருக்கு கரோனா! - கரோனா அப்டேட்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 19) புதிதாக 1087 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

covid
covid
author img

By

Published : Mar 19, 2021, 9:21 PM IST

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (மார்ச் 19) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 72 ஆயிரத்து 998 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்த 1083 நபர்களுக்கும், கத்தார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தலா ஒருவருக்கு என 1087 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 83 லட்சத்து 11 ஆயிரத்து 295 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் எட்டு லட்சத்து 64 ஆயிரத்து 450 பேர் தீநுண்மி தொற்றுக்கு ஆளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் ஆறாயிரத்து 690 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்து இன்று (மார்ச் 19) 610 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை எட்டு லட்சத்து 45 ஆயிரத்து 178 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவமனையில் 3 பேர், தனியார் மருத்துவமனையில் 6 பேர் என 9 பேர் இன்று ஒரேநாளில் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12,582 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மேலும் புதிதாக 421 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 105 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 102 நபர்களுக்கும், திருவள்ளூரில் 78 நபர்களுக்கும், தஞ்சாவூரில் 64 நபர்களுக்கும் என அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தொற்று நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மாவட்டம் வாரியாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை

சென்னை - 2,40,671

கோயம்புத்தூர் - 56,917

செங்கல்பட்டு - 54,063

திருவள்ளூர் - 44,970

சேலம் - 32,994

காஞ்சிபுரம் - 29,872

கடலூர் - 25,334

மதுரை - 21,433

வேலூர் - 21,204

திருவண்ணாமலை - 19,570

திருப்பூர் - 18,792

தஞ்சாவூர் - 18,617

தேனி - 17,212

கன்னியாகுமரி - 17,264

விருதுநகர் - 16,752

தூத்துக்குடி - 16,414

ராணிப்பேட்டை - 16,290

திருநெல்வேலி - 15,859

விழுப்புரம் - 15,330

திருச்சி - 15,202

ஈரோடு - 15,039

புதுக்கோட்டை - 11,745

நாமக்கல் - 11,912

திண்டுக்கல் - 11,646

திருவாரூர் - 11,542

கள்ளக்குறிச்சி - 10,921

தென்காசி - 8,599

நாகப்பட்டினம் - 8,753

நீலகிரி - 8,482

கிருஷ்ணகிரி - 8,258

திருப்பத்தூர் - 7,681

சிவகங்கை - 6,857

ராமநாதபுரம் - 6,500

தர்மபுரி - 6,693

கரூர் - 5,563

அரியலூர் - 4,764

பெரம்பலூர் - 2,297

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 963

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,047

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.