ETV Bharat / state

கரோனா நிலவரம் இன்று: பாதிப்பு - 5, 595; இறப்பு - 67

author img

By

Published : Oct 2, 2020, 6:20 PM IST

Updated : Oct 2, 2020, 10:14 PM IST

TN corona cases today
கரோனா நிலவரம்

18:15 October 02

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 5 ஆயிரத்து 595 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (அக்.2) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில் கூறியிருப்பதாவது: சென்னையில் மேலும் ஒரு தனியார் ஆய்வகத்தில் கரோனா பரிசோதனை செய்வதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 188ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக 83 ஆயிரத்து 123 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்து 5 ஆயிரத்து 588 நபர்களுக்கும், மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்த தலா இரண்டு நபர்களுக்கும், கர்நாடகாவில் இருந்து வந்த ஒருவருக்கும் என, 5 ஆயிரத்துக்கு 595 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 73 லட்சத்து 4 ஆயிரத்து 809 நபர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 6 லட்சத்து 8 ஆயிரத்து 885 நபர்கள் வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் என 46 ஆயிரத்து 294 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்த 5 ஆயிரத்து 603 பேர் இன்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 52 ஆயிரத்து 938ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி 67 பேர் ஒரே நாளில் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 653 உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு

சென்னை - 1,70,025

செங்கல்பட்டு - 36,358

திருவள்ளூர் - 32,822

கோயம்புத்தூர் - 33,116

காஞ்சிபுரம் - 22,262

கடலூர் - 20,276

சேலம் - 20,334

மதுரை - 16,773

திருவண்ணாமலை - 15,714

தேனி - 15,044

வேலூர் - 15072

விருதுநகர் - 14,476

தூத்துக்குடி - 13,567

ராணிப்பேட்டை - 13,553

திருநெல்வேலி - 12,882

கன்னியாகுமரி - 12,917

விழுப்புரம் - 11,936

தஞ்சாவூர் - 11,650

திருச்சிராப்பள்ளி - 10,708

கள்ளக்குறிச்சி - 9,289

புதுக்கோட்டை - 9,266

திண்டுக்கல் - 8,930

திருப்பூர் - 8,530

தென்காசி - 7,411

திருவாரூர் - 7,457

ஈரோடு - 7,118

ராமநாதபுரம் - 5,568

நாமக்கல் - 5,767

சிவகங்கை - 5,230

நாகப்பட்டினம் - 5,336

திருப்பத்தூர் - 5,127

கிருஷ்ணகிரி - 4,775

நீலகிரி - 4,318

அரியலூர் - 3,817

தருமபுரி - 3,937

கரூர் - 3,172

பெரம்பலூர் - 1,880

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 924

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 954

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: ஆதரவற்றவரின் உடலை தானே குழிதோண்டி அடக்கம் செய்த காவலர்!

Last Updated : Oct 2, 2020, 10:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.