நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் மாறுபாடு காரணமாக ஹைதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று (டிச. 25) அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.
இதனையடுத்து, இன்று ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து அறிக்கை வெளியிட்ட அப்போலோ மருத்துவமனை, ‘ரஜினிகாந்தின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ரத்த அழுத்த மாறுபாடு, நேற்று இருந்ததைவிட இன்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால், டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று (டிசம்பர் 26) மாலை முடிவுசெய்யப்படும்' எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் ரஜினியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடல்நலம் குறித்து விசாரித்தார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர், “ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் திரைப்பட நடிகர் ரஜினிகாந்தை, நான் இன்று (டிச. 26) தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததோடு, அவர் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது?