மும்பை சேர்ந்த தாராசந்த் என்பவர் திருச்சியில் தங்க நகை வளையல் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இரவு தங்க வளையல் ஆர்டர் கொடுக்க திருச்சியிலிருந்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வந்துள்ளார். பேருந்திலிருந்து இறங்கி வந்து தனது பையை திறந்து பார்த்தபோது பையில் வைத்திருந்த 23 தங்க வளையல் மாயமாகியிருந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த தாராசந்த், இது குறித்து கோயம்பேடு காவல் நிலைத்தில் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தொடர்ச்சியாக வழிப்பறி கொள்ளை அரங்கேறி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதேபோல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சுற்றியுள்ள சிசிடிவி கேமரா பழுதடைந்துள்ளதால் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.