ETV Bharat / state

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பம்- தேர்வு வாரியம் - tet exam

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இதுவரை ஆறு லட்சத்து நான்காயிரத்து 156 பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு
author img

By

Published : May 12, 2019, 3:09 PM IST

இது குறித்து தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள கூறியுள்ளதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்பவர்கள் இரண்டு தாள்கள் எழுத வேண்டும். இதற்காக தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது.

இரண்டு தாள் அடங்கிய இந்தத் தேர்வை எழுத இதுவரை ஆறு லட்சத்து நான்காயிரத்து 156 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் முதல் தாளுக்கு ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 341 பேரும், இரண்டாம் தாள் எழுத நான்கு லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் அடங்குவர்.

Intro:ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் 2 எழுத
6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பம்
ஜூன் முதல் வாரத்தில் தேர்வு திட்டம்

Body:சென்னை, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்றினை எழுதுவதற்கு ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 341 பேரும், தாள் 2 எழுதுவதற்கு 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் என ஆறு லட்சத்து 4 ஆயிரத்து 156 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான போட்டி எழுத்து தேர்வினை ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வு 2019 ல் தாள் 1 மற்றும் 2 ஆகியவற்றினை எழுதுவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மார்ச் 15 ம் தேதி முதல் ஏப்ரல் 12 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது.
ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதுவதற்கு பதிவு செய்துள்ளவர்களின் விவரம் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதுவதற்கு மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து உள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்றினை எழுதுவதற்கு ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 341 பேரும், ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 எழுதுவதற்கு 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இவர்களுக்கான எழுத்து தேர்வு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு தேவையான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என அவர் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.