தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்துறைக்கான பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.
அப்போது உழவர் சந்தைகள் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்படும் என்றும், இதற்காக 12 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்தார்.
உழவர் சந்தைகளில் நாள்தோறும் சராசரியாக 2000 மெட்ரிக் டன் பழங்கள், காய்கறிகள், 8000 விவசாயிகள் மூலம் நான்கு லட்சம் நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
புதுப்பொலிவுடன் உழவர் சந்தைகள்
எனவே 50 உழவர் சந்தைகளில் தற்போதைய நிலையை ஆராய்ந்து அவை புதுப்பொலிவுடன் செயல்பட 12 கோடி ரூபாய் மாநில அரசின் நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சிறிய உழவர் சந்தைகள்
கடலூர், திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், கரூர் ஆகிய இடங்களில் 10 சிறிய உழவர் சந்தை ஆறு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
ஒட்டன்சத்திரம், பண்ருட்டியில் 10 கோடி ரூபாய் நிதியில் நவீன குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும் என்றும் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர் செல்வம் கூறினார்.
இதையும் படிங்க : கொடநாடு வழக்கில் புதிய திருப்பம்