ETV Bharat / state

பாஜக இருந்தாலும் கொள்கை வேறு - அதிமுக கூட்டணியில் நீடிப்பதாக தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி விளக்கம் - தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி

பாஜக இருந்தாலும், அதிமுக கூட்டணியின் கொள்கை வேறாக இருப்பக்கிறது. முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக விளங்குவதால் அதன் கூட்டணியில் நீடிப்பதாக தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி விளக்கம் அளித்துள்ளது.

tmmuk party
மிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் ஷேக் தாவூத்
author img

By

Published : Mar 7, 2021, 2:52 PM IST

சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருந்தாலும், அதிமுக கட்சியின் கொள்கை வேறாக இருப்பதால் அதன் கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதாக தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் தெரிவித்தார்.

சென்னையில் அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகள் சந்தித்து கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத், “அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சி சார்பில் ராமநாதபுரம், கடையம், வாணியம்பாடி ஆகிய மூன்று தொகுதிகளில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளோம்.

கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருந்தாலும், அதிமுக என்றும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. சிறுபான்மையினரின் நலனில் அதிமுகவின் கொள்கை என்றும் பாதுகாப்பாக இருக்கிறது.

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்திலும் முஸ்லிம்களை திமுகதான் குற்றவாளி என கூறியது. பாஜகவுடன் கூட்டணி எனக்கூறி முஸ்லிம் ஓட்டுகளை பெறுவதற்கு திமுக முயற்சிக்கிறது. என்ஆர்ஐ, சிஏஏ போன்ற சட்டங்களால் முஸ்லிம்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

அதிமுக கூட்டணியில் நீடிப்பதாக தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி விளக்கம்

சிஏஏ சட்டத்தால் வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு வருபவர்களுக்குத்தான பாதிப்பு ஏற்படும். தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. எனவே அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சி பாடுபடும்” என்றார்.

இதையும் படிங்க: பாசிச பாஜக ஆட்சியை அதள பாதாளத்தில் வீழ்த்துவோம் - திமுக கூட்டணி தலைவர்கள் சூளுரை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.