ETV Bharat / state

பம்மலில் கஞ்சா விற்பனை: மூவர் கைது - chennai news in tamil

பல்லாவரம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த மூன்று பேர் கைது அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா பொட்டலம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

three-were-arrested-for-ganja-selling
பம்மலில் கஞ்சா விற்பனை: மூவர் கைது
author img

By

Published : Sep 6, 2021, 7:14 AM IST

சென்னை: பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சங்கர்நகர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்து. தகவலின் அடிப்படையில் அவர்கள் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, பம்மல் பகுதியில் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் சாம்சன்(31) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். அதில், தான் பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ஜோனத்தன் எலிசபத்(22), பம்மல் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்(23) ஆகியோரிடமிருந்து கஞ்சாவை வாங்கி புகைப்பது மட்டுமல்லாது, கஞ்சாவை விற்பதாக அவர் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து மூன்று பேரை கைது செய்த காவலர்கள் அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா பொட்டலம், கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய காரினை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான வானகரத்தைச் சேர்ந்த பிரதீப் என்ற நபரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமியை திருமணம் செய்த விவசாயி கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.