ETV Bharat / state

கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்க பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் - திருமாவளவன் - சென்னை மாவட்ட செய்திகள்

கூடங்குளத்தில் ஆழ்நிலை அணுக்கழிவு புதை மையம் அமைக்கப்படும் வரை விரிவாக்க பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்க பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்

author img

By

Published : Oct 20, 2021, 8:58 PM IST

சென்னை: பத்திரிகையாளர் மன்றத்தில் கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கத்திற்கு எதிராகவும் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிராகவும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதாவது, "கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணு உலை ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு அளித்திருக்கும் அனுமதியை உடனே திரும்பப் பெற வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்ட இரண்டு அணு உலைகள் திறம்பட இயங்கவில்லை. கூடங்குளத்தில் ஆழ்நிலை அணுக்கழிவு புதை மையம் அமைக்கப்படும் வரை விரிவாக்க பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்துவோம்" என்றார்.

விரிவாக்க பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பேசியதாவது, "இந்தியாவின் மின் தேவையில் 1.1 விழுக்காடு தான் அணு உலைகள் மூலம் கிடைக்கிறது. அணுக்கழிவுகள் அணு உலை உள்ளேயே சட்ட விரோதமாக புதைக்கப்படுகிறது. ரஷ்யாவுடனான 1997 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூடங்குளம் அணு உலைகளில் எரிக்கப்படும் எரிகோள்களை ரஷ்யாவுக்கே திருப்பி அனுப்ப வேண்டும்" என்றார்.

அணு உலைகளில் எரிக்கப்படும் எரிகோள்கள்

பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் பேசியதாவது, "வருடத்தில் 4 மாதங்கள் மட்டுமே அணு உலை இயங்குவதாகவும் மற்ற நேரங்களில் பழுதடைந்து விடுகின்றன. அணு உலை வரலாற்றிலேயே அதிக பழுது ஏற்படும் உலையாக கூடங்குளம் உள்ளது. எனவே 5, 6-வது அணு உலைகள் அமைக்கும் பணியை முற்றிலுமாக கைவிட வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: ஆளுநரை முதல் முறையாகச் சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.