ETV Bharat / state

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது- வைகோ - ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை

இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத சூழலில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக்கூடாது என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

there-is-no-shortage-of-oxygen-in-india-do-not-open-sterlite-plant-vaiko-condemn

author img

By

Published : Apr 22, 2021, 3:15 PM IST

Updated : Apr 22, 2021, 3:22 PM IST

சென்னை: நாட்டில் நிலவும் கரோனா அச்சுறுத்தலை சாதகமாக்கிக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தருகிறோம். மீண்டும் ஆலையை இயக்க அனுமதி தாருங்கள் என, ஸ்டெர்லைட் நிறுவனம் அனுமதி கோரியதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கரோனா தொற்று நோய்ப் பரவலால் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமையைப் பயன்படுத்தி ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தருகிறோம் என்று கூறி, ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மீண்டும் இயக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், செயலரும் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்தியாவில் ஒரு நாளைக்கு 7000 டன் ஆக்ஸிஜன் தொழிற்கூடங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

இந்திய அளவிலும் கூட, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை. போதுமான அளவு உள்ளது. ஆனால், அதை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள்தான் தேவை என்று, இந்தியாவின் முன்னணி ஆக்ஸிஜன் ஆக்க நிறுவனமான ஐநோக்ஸ் கூறியுள்ளது.

கடந்தாண்டு, இதே காலகட்டத்தில், கரோனா முடக்கத்தின்போது, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எதுவும் இல்லை. அண்மையில், இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு 8,828 மெட்ரிக் டன்னும், வேறு பல நாடுகளையும் சேர்த்து, மொத்தமாக 9,300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றது.

சிறிய கருவிகள் மூலம், ஒரு நிமிடத்திற்கு 5 முதல் 10 லிட்டர் வரை ஆக்ஸிஜன் உருவாக்க முடியும். அப்படி, ஒவ்வொரு மருத்துவமனைக்கும், ஐந்து அல்லது பத்து கருவிகள் இருந்தால் போதும்.

அத்தகைய ஒரு கருவி, ஒரு நாளைக்கு 7,200 லிட்டர் ஆக்ஸிஜனைத் தரும். ஐந்து கருவிகள் என்றால், ஒரு நாளைக்கு 36,000 லிட்டர் ஆக்க முடியும். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து பரவிய நச்சுக்காற்றால், தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கானோர் மயங்கி விழுந்தார்கள்.

அந்தப் பகுதி வாழ் மக்களுக்கும், உழவுத் தொழிலுக்கும் கேடு விளைவித்து வருகின்றது என்பதை, சென்னை உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவுப்படுத்தி இருக்கின்றன. எனவே, அந்த ஆலையை மீண்டும் இயக்க வேண்டிய தேவை இல்லை. அத்தகைய முயற்சிகளுக்கு, தமிழ்நாடு அரசு இடம் தரக் கூடாது எனக் கேட்டுக் கொள்கின்றேன்" என, அந்த அறிக்கையில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Apr 22, 2021, 3:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.