ETV Bharat / state

ஊரடங்கு உத்தரவு: உணவின்றி தவிக்கும் நரிக்குறவர்கள்! - தேனியில் உணவின்றி தவிக்கும் நரிக்குறவர் குடும்பங்கள்

தேனி: நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தேனியில் 10-க்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பங்கள் உணவின்றி தவித்து வருகின்றன.

Theni Lockdown Food
Theni Lockdown Food
author img

By

Published : Apr 9, 2020, 8:11 AM IST

தேனி ரயில் நிலைய சாலையில் உள்ள ரயில்வே துறைக்குச் சொந்தமான இடத்தில் நரிக்குறவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பாசிமணி மாலை, சீப்பு, கண்ணாடி, பொட்டு உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. உணவு, அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் குழந்தைகளுடன் தவித்து வருகின்றனர். நாடோடிகளாக பிழைப்பு நடத்தி வரும் இவர்களுக்கு குடும்ப அட்டை இல்லாததால் நியாயவிலைக் கடைகள் மூலம் அரசு வழங்கும் நிவாரண உதவி, இலவச பொருள்கள் ஆகியவற்றை பெற முடியாத நிலையில் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களில் ஒருவர் பேசியதாவது, "காவல்துறையினர் எங்களை சாலையில் நடமாட அனுமதிக்கவில்லை. இதனால் எங்களது வசிப்பிடத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் செயல்பட்டு வரும் சமூக கூடங்களுக்குச் சென்று உணவருந்த முடியாத நிலையில் உள்ளோம். எங்கள் நிலையறிந்து சில அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருள்களை வழங்கியுள்ளனர். அதன் மூலம் மூன்று வேளையும் சாப்பிட்டு நாட்களை நகர்த்தி வருகிறோம்" என்று வேதனை தெரிவித்தார்

உணவின்றி தவிக்கும் நரிக்குறவ குடும்பங்கள்

மேலும், கடந்த இரண்டு வாரங்களாக வாழ்வாதாரம், போதிய உணவின்றி தவித்து வரும் தங்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:காய்கறிகள், பழங்களைக் கிடங்குகளில் பாதுகாத்திட வசூலிக்கும் கட்டணம் ரத்து - அரசாணை வெளியீடு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.