சென்னை மயிலாப்பூர் காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட ராயப்பேட்டை, கோட்டூர்புரம், மயிலாப்பூர் காவல் நிலையங்களில் பதிவான புகார்களின் அடிப்படையில் 108 செல்போன்கள் தனிப்படையினரால் மீட்கப்பட்டன.
சில செல்போன்கள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளன. மயிலாப்பூர் பாரதி வித்யாலயாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாப்பூர் உதவி ஆணையர் ரமேஷ், ராயப்பேட்டை உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன் ஆகியோர் பங்குபெற்று மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
அப்போது உரையாற்றிய அவர்கள், செல்போன் திருட்டை தவிர்க்க சில அறிவுரைகளை வழங்கினர்.