ETV Bharat / state

‘புலம் பெயர் தொழிலாளர்களின் விவரவரங்களை வைத்திருக்க வேண்டும்’ - ஒன்றிய அரசுக்கு கனிமொழி வலியுறுத்தல்! - ஒன்றிய அரசை வலியுறுத்திய கனிமொழி

புலம் பெயர் தொழிலாளர்களின் விவரவரங்கள் குறித்த பதிவை, தேசிய அளவில் வைத்திருக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 29, 2023, 4:17 PM IST

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், பாதுகாப்பான இடம் பெயர்வுக்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில், ஆணையத் தலைவரான நீதியரசர் பாஸ்கரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி கருணாநிதி, கலாநிதி வீராசாமி, கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "உலகிலேயே அதிகளவில் புலம் பெயர்ந்தவர்கள் வாழும் நாடு இந்தியா. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு கோடிக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து வேலை செய்பவர்கள் இருக்கின்றனர்.

மக்கள் பிரதிநிதியாக டெல்லியின் கலாச்சாரம், மொழி தெரியாமல் அலுவல் பணிக்காக டெல்லி செல்லும் போதே ஒரு வித அச்ச உணர்வு ஏற்படும். அதுபோன்று வேலைக்காக வேறு மாநிலங்களுக்குச் செல்லும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ஒரு வித புது அச்ச உணர்வு ஏற்படும்.

கரோனா காலத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வெளி நாடுகளில் வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்னைகளை எத்தனையோ நாடுகளில் கேட்க கூட தயாராக இல்லை. ஒரு மாநிலத்திலிருந்து மற்ற மாநிலத்திற்குச் செல்லும் புலம் பெயர் தொழிலாளர்களின் விவரவரங்கள் குறித்த பதிவை தேசிய அளவில் வைத்திருக்க வேண்டும்” என ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு கனிமொழி வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், “தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளில் வேலைக்குச் செல்லும் புலம்பெயர் தமிழர்களின் நலனை காக்க, தமிழ்நாடு முதலமைச்சர் தனித்துறை அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளதை கனிமொழி சுட்டிக்காட்டினார். மக்களை தேடி மருத்துவ சேவை புலம் பெயர் தொழிலார்களுக்கும் வழங்கப்படும் என அறிவித்த பெருமை மிகு மாநிலம் தமிழ்நாடு” என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, “புலம் பெயர் தொழிலாளர்கள் தொடர்பான பெரும்பாலான சட்டங்கள் 40 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டவை. புலம் பெயர் தொழிலாளர்களை பாதுகாக்க தமிழ்நாடு முதலமைச்சர் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளார். ஒரு மாநிலத்திலிருந்து மற்ற மாநிலத்திற்குச் செல்லும் புலம் பெயர் தொழிலாளர்களின் விரவரங்கள், தரவுகள் குறித்த பதிவு தேசிய அளவில் இல்லை.

தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் வேலைக்கு பணிபுரிய வேண்டும் என்பதற்காக தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகின்றனர். வட மாநில தொழிலாளர்களை, நாம் அழைத்து வரக்கூடிய விருந்திநர்கள் என்ற உணர்வுடன் பாதுகாக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: விஸ்கோஸ், செயற்கை இழை பஞ்சு, நூல்களுக்கு அரசின் தரக் கட்டுப்பாட்டில் விலக்கு: மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.