ETV Bharat / state

"நம் பணத்தை பிற மாநிலங்களுக்கு அள்ளியும் நமக்கு கிள்ளியும் மத்திய அரசு வழங்குகிறது" - அமைச்சர் மூர்த்தி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 1:58 PM IST

தமிழ்நாட்டு மக்களின் பணம் முழுவதுமாக தமிழ்நாட்டிற்கு பயன்படுத்தப்பட்டால் நாம் யாரிடமும் கையேந்த வேண்டிய நிலை இல்லை. நம் பணத்தை பிற மாநிலங்களுக்கு அல்லியும் நமக்கு கிள்ளியும் ஒன்றிய அரசு வழங்குகிறது என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

Minister moorthy
அமைச்சர் மூர்த்தி

சென்னை: ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ஆம் தேதி தேசிய சீட்டு நிதி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை கொண்டாடும் விதமாக அனைந்து இந்திய சீட்டு நிதி சங்கம் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் சீட்டு நிதி விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு நடப்பாண்டில் சிறப்பாக பங்காற்றிய நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கினார்.

இவ்விழாவில் சிறப்புரையாற்றிய வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி; "கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி தேசிய சீட்டு நிதி தினமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் மக்கள் வங்கியில் சென்று சேமிப்பதை விட சீட்டு நிறுவனங்களுக்கு சென்று சேமித்தது அதிகம்.

முறையாக பதிவு செய்யாமல் மக்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை ஏமாற்றும் சில நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. அவற்றை முறையாக கையாளும் நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீட்டு நிதி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக மக்கள் சேமிப்பில் பெரும் உதவியாக இருந்து வருகிறது.

கிராமப்புறங்களில் சேமிப்பை சிறுசேமிப்பாக மக்களிடம் கொண்டு சேர்த்ததில் சீட்டு நீதி நிறுவனங்களின் பங்கும் அதிகம். நிறுவனங்கள் பதிவு செய்யும் பொழுது தாமதங்களும், சில சிக்கல்களும் ஏற்படுகின்றன என கூறினீர்கள். விரைவில் அவை நிவர்த்தி செய்யப்படும். தற்போது வீட்டுமனை, பட்டா, நிறுவனங்கள் பதிவு போன்றவை அனைத்தும் ஒரே இடத்தில் பதிவு செய்யப்படுவதால் சிறிது தாமதம் ஏற்படுகிறது. ஆன்லைன் பதிவு செய்வதில் 2.0 மென்பொருள் பயன்பாட்டில் அடுத்த 6 மாதத்தில் 3.0 மென்பொருள் சேவை பயன்பாட்டில் கொண்டு வர உள்ளோம். இதன் காரணமாக பதிவித்துறையின் வேகம் அதிகரிக்கும்.

இதையும் படிங்க: தருமபுர ஆதீன கலைக்கல்லூரி பவளவிழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு!

17A என்னும் சட்டம் போலி பத்திரங்களை முழுவதுமாக ரத்து செய்யப்படும். குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்று கொண்டுவரப்பட்ட இந்த சட்டம், மக்களை பெருமளவில் உதவிகரமாக இருந்து வருகிறது. ஏழை, எளிய மக்கள் வாங்கிய இடத்தை 5 ஆண்டு பிறகு சென்று பார்த்தால், வேறு ஒருவர் போலி பதிவு செய்து அந்த இடத்தை ஆக்கிரமித்து இருப்பர். அதை நீதிமன்ற வாயிலாக மீட்க அவர் பல வருடங்கள் போராட வேண்டும். ஆனால், இந்த 17A சட்டம் மூலம் போலி பதிவு செய்த பத்திரங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இது ஏழை, எளிய மக்களுக்கு பெரும் உதவியாக அமைந்தது.

மக்களிடம் இருந்து வாங்கப்படும் ஜிஎஸ்டி வரிப்பணத்தை பாதிக்கு மேல் மத்திய அரசிடம் வழங்கி வருகிறோம். அந்தப் பணம் நம் மாநிலத்தை விட பிற மாநிலங்களுக்கு தான் அதிக அளவில் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டு மக்களின் பணம் முழுவதுமாக தமிழ்நாட்டிற்கு பயன்படுத்தப்பட்டால் நாம் யாரிடமும் கையேந்த வேண்டிய நிலை இல்லை. நம் பணத்தை பிற மாநிலங்களுக்கு அள்ளியும் நமக்கு கிள்ளியும் ஒன்றிய அரசு வழங்குகிறது" என்று கூறினார்.

இவ்விழாவில் அனைத்து இந்திய சீட்டு நிதி சங்க தலைவர் பிரவின், அனைத்து இந்திய சீட்டு நிதி சங்க ஆலோசகர் சிவராமகிருஷ்ணன், இந்திய சீட்டு நிதி ஆலோசகர் வாரிய தலைவர் இளங்கோவன், இந்திய சீட்டு நிதி சங்க தலைவர் சிற்றரசு, செயலாளர் உமாபதி, தமிழ்நாடு சீட்டு நிதி சங்க தலைவர் கிருஷ்ண பாரதி, செயலாளர் செந்தில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சந்திரயான்-3 குறித்த சர்ச்சை பதிவால் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது குவியும் வழக்குகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.