இதுதொடர்பாக, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் கூறியதாவது, "சில தினங்களுக்கு முன்னர் ஜூன் மாதம் இறுதியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கூறிய தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.
ஆனால், தற்போது ஜூன் ஒன்றாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளார். இந்தத் தேர்வு அட்டவணையால் அரசுப் பள்ளி மாணவர்கள் முழுவதும் பாதிக்கப்படுவார்கள். தேர்வு எழுதப்போகும் மாணவர்கள், தேர்வு பணியாற்றவுள்ள ஆசிரியர்களின் உயிர்களைப் பற்றி கவலைப்படாமல், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது போன்று அவசர அவசரமாக தேர்வுகளை நடத்துவதால், பல லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டு, மீண்டும் ஒருமுறை பொதுத் தேர்வு நடத்தும் அவல நிலை உருவாகும். கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும், இந்தச் சூழலில் அமைச்சரின் அறிவிப்பு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல மாதங்களாக பள்ளிகளுக்குத் தொடர்பில்லாத 70 விழுக்காடு கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களையும் தொடர்ந்து தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வாட்ஸ்-அப் மூலமாக படித்துக் கொண்டிருக்கிற 30 விழுக்காடு மாணவர்களையும், அவசர அவசரமாக அழைத்து தேர்வு நடத்தி மதிப்பீடு வழங்குவது நியாயமற்றது. சமூக நீதிக்கு எதிரானதாகும். தற்போதுள்ள சூழலில் மாணவர்களின் உயிரைவிட தேர்வு ஒன்றும் முக்கியமானதல்ல.
எனவே, இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: காதலுக்கு உதவிய நண்பன்- கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் கைது