ETV Bharat / state

அரையாண்டு தேர்வு விடுமுறை கிடையாது? - no mid-term exam holidays.

கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் பாடத்திட்டங்களை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு விடுமுறை கிடையாது என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

-exam-holidays
-exam-holidays
author img

By

Published : Dec 21, 2021, 2:14 PM IST

சென்னை : கரோனா தொற்று காரணமாக ஒரு ஆண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் காலதாமதமாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. நவம்பர் 1ஆம் தேதி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கும் மேலாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், பாடத் திட்டங்களை நடத்தி முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் இந்த ஆண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

மேலும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாடத்திட்டங்களை முடிக்க வேண்டும் என்பதற்காக வழக்கமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக தொடங்கி, ஜனவரி 1ஆம் தேதி அல்லது முதல் வாரம் வரை விடப்படும் அரையாண்டு தேர்வு விடுமுறை இந்த முறை கிடையாது என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், பள்ளிகள் வழக்கம் போல் தொடர்ந்து இயங்கும் என்ற தகவலையும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : ஜிஎஸ்டி வரி உயர்வு - கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.