ETV Bharat / state

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் பாகுபாட்டை வெளிப்படுத்துகிறது- பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் - chief mininster edappadi palanisamy

சென்னை:  ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட விதிமுறைகள் பாகுபாடு காட்டும் வகையில் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் பாகுபாட்டை வெளிப்படுத்துகிறது- பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

author img

By

Published : Sep 9, 2020, 11:44 AM IST

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், “ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட துறைகளுக்கு தேவையான நிதி கிடைக்க அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் ஆட்சேபிக்கும் வகையில் உள்ளது. குறைந்த அளவில் கடன் வசதி கிடைத்திருக்கும் மாவட்டங்களுக்குக் கூடுதலாக நிதி ஆதாரங்கள் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது வரவேற்கதக்கது என்றாலும், சிறப்பாக செயல்படும் மாவட்டங்களிலிருந்து நிதியை மற்ற மாவட்டங்களுக்கு கொண்டுச் செல்ல வேண்டும் என்ற விதிமுறை பாகுபாட்டை காட்டும் விதமாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களும் (புதிய மாவட்ட வரையறைக்கு முன்) அதிகக் கடன் வசதி கிடைக்கும் மாவட்டங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. நாட்டில் வேறு எந்த மாநிலத்திற்கும் இதுபோன்ற அளவுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. ரிசர்வ் வங்கியின் இந்த விதிமுறைகளால் தமிழகத்தில் கடன் உதவி கிடைப்பது ஊக்குவிக்கப்படாது.

கடன் வசதி போதிய அளவுக்கு கிடைக்காத இடங்களில் அவற்றை அதிகரிக்க ஒட்டுமொத்தமாக நிதி ஆதாரத்தை பெருக்க வேண்டும். தமிழக மாவட்டங்களில் அதிகளவு கடன் வசதி கிடைக்க இங்குள்ள நிறுவனங்களின் தொழில், உழைப்பு மற்றும் உரிய நேரத்தில் கடனை திரும்பச் செலுத்துவது ஆகியவையே காரணம். விதிமுறைகளை முறையாக பின்பற்றியதற்காக அவர்களுக்கு தண்டனை வழங்குவதைப் போல செயல்படக்கூடாது. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதிமுறைகள் திரும்பப் பெற வேண்டும்.

நாடே கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில், வங்கிகளில் வாராக் கடன்கள் அதிகரித்து வரும் சூழலில், முறையாகக் கடனை திரும்ப செலுத்தியவர்கள் ஊக்கவிக்கப்பட்டு பொருளாதாரத்தை விரிவுபடுத்த உதவ வேண்டும்.” என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.