ETV Bharat / state

பொதுத் தேர்வில் முக்கியப் பாடங்களில் தேர்ச்சி விகிதம் வெளியீடு

சென்னை: 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில்  முக்கியப் பாடங்களில் மாணவர்கள் பெற்றுள்ள தேர்ச்சி விகிதம் வெளியாகியுள்ளது.

தேர்ச்சி விகிதம் வெளியீடு
author img

By

Published : Apr 19, 2019, 11:19 AM IST

மாநிலம் முழுவதும் கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 8 லட்சத்து 42 ஆயிரத்து 512 பேர் தேர்வு எழுதினர். இதில் 4 லட்சத்து 53 ஆயிரத்து 262 மாணவிகளும், 3 லட்சத்து 89 ஆயிரத்து 250 மாணவர்களும் அடங்குவர்.

இதைதொடர்ந்து பொது தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் மொத்த தேர்ச்சி விகிதம் 91.3 ஆகும். மாணவிகள் 93.64 விழுக்காடும், மாணவர்கள் 88.57 விழுக்காடும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் மாணவர்கள் பாடவாரிய தேர்வு பெற்றவர்களின் விழுக்காடு பட்டியலையும் பள்ளிகல்வி இயக்கம் வெளியிட்டுள்ளது. இதில் இயற்பியலில் 93.89 சதவீதம் பேரும், வேதியியலில் 94.88 சதவீதம் பேரும், உயிரியலில் 96.05 சதவீதம் பேரும், கணிதத்தில் 96.25 சதவீதம் பேரும், தாவரவியல் பாடத்தில் 89.98 பேரும், விலங்கியலில் 89.44 சதவீதம் பேரும், கம்ப்யூட்டர் அறிவியலில் 95.27 சதவீதம் பேரும், வணிகவியலில் 91.23 சதவீதம் பேரும், கணக்குப்பதிவியிலில் 92.41 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொழிப்பாடங்களில் தேர்வு எழுதியவர்களில் 94.12 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில் 93.83 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு  பொதுத் தேர்வில் பள்ளிகள் அளவில்
  முக்கியப்பாடங்களில் தேர்ச்சி விகிதம் 
சென்னை, 
 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில்  முக்கியப் பாடங்களான இயற்பியலில் 93.89 சதவீதம் பேரும், வேதியியலில் 94.88 சதவீதம் பேரும், உயிரியலில் 96.05 சதவீதம் பேரும், கணக்குப் பாடத்தில் 96.25 சதவீதம் பேரும், தாவரவியல் பாடத்தில் 89.98 பேரும், விலங்கியல் பாடத்தில் 89.44 சதவீதம் பேரும், கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் 95.27 சதவீதம் பேரும், வணிகவியல் பாடத்தில் 91.23 சதவீதம் பேரும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 92.41 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
மொழிப்பாடங்களில் தேர்வு எழுதியவர்களில் 94.12 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில் 93.83 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.