இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகுவை சந்தித்து புகார் அளித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,
"தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் பரிசு பொருட்கள், பணம் பட்டுவாடா (500முதல் 5000வரை) வாக்கு பதிவு மையம் அருகிலேயே நடைபெற்றுள்ளது. இது ஜனநாயக முறைப்படி நடைபெற்ற தேர்தல் அல்ல. எனவே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் எந்தெந்த தொகுதியில் யார்யார் வாக்கிற்கு பணம் கொடுத்தார்கள் என்பதை ஆய்வு செய்து அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டி, குறைந்தது ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் தூய்மையான, நேர்மையான தேர்தல் நடத்த விரும்பவர்களை ஒன்றிணைத்து போராடுவோம் என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் கைகோர்க்கும் 'கர்ணன்' கூட்டணி!