ETV Bharat / state

"புதுமைப் பெண்" திட்டம் - 2ஆம் கட்டமாக முதலமைச்சர் நாளை தொடங்கி வைப்பு! - சென்னை மாவட்ட செய்திகள்

"புதுமைப் பெண்" திட்டத்தை பட்டாபிராம், இந்து கல்லூரியில் நடைபெறவுள்ள விழாவில், 1,04,347 மாணவிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இரண்டாம் கட்டமாகத் தொடங்கி வைக்கிறார்.

"புதுமைப் பெண்" 2ம் கட்ட திட்டம்- முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்

author img

By

Published : Feb 7, 2023, 10:34 PM IST

சென்னை: பெண் கல்வியைப் போற்றும் விதமாகவும், உயர் கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழ்நாட்டின் நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாக்கிட 5.9.2022அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித் தொகை வழங்கும் ”புதுமைப் பெண்” திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம், பெண்களுக்கு உயர் கல்வி அளித்து, பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பைத் தொடர ஊக்குவித்தல், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்யப்படுகிறது.

'புதுமைப்பெண்' திட்டத்தின் முதற்கட்டத்தில் 1,16,342 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் இடைநிற்றலில் இருந்து 12,000 மாணவிகள் மீண்டும் உயர்கல்வியில் சேர்ந்து பயனடைந்துள்ளனர். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம், இந்து கல்லூரியில் நடைபெறவுள்ள விழாவில், மேலும் 1,04,347 மாணவிகள் பயன்பெறும் வகையில் புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்.

இதையும் படிங்க:உடன்கட்டை பெருமையான செயலா? கனிமொழி எம்.பி. காட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.