சென்னை விமானத்தில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் திருநாவுகரசர் கூறியதாவது, தேர்தல் சமயத்தில் கமல்ஹாசன் பரப்புரையை தடுத்து நிறுத்துவது, அவர் மீது செருப்பு வீசுவது போன்ற செயல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. எந்த மதத்தை சேர்ந்தவரும் தீவிரவாதியாக இருக்கக்கூடும். தீவிரவாதிகள் யாரும் இந்துவாக இருக்க முடியாது என மோடி குறிப்பிடுகிறார். அப்படி என்றால் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்கள்தான் தீவிரவாதிகள் என்று கூறுகிறாரா மோடி?
முதலில் ராகுலை பிரதமர் என அறிவித்தவர் ஸ்டாலின். தமிழிசை ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக இருந்துகொண்டு வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது. பாஜக தோல்வி பயத்தால் ஸ்டாலின், பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதாக பொய்யான விமர்சனத்தை முன் வைக்கின்றனர். மேற்குவங்காளத்தில் ஈஸ்வரர் வித்யாசாகர் ராவ் சிலை உடைக்கப்பட்டதிற்கு பிரதமர் மோடி அளித்துள்ள பதில், அவரின் ஆணவப் போக்கை பிரதிபலிக்கிறது என்றார்.