சென்னை, தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், நேரு சாலையில் செல்போன் சர்வீஸ் சென்டர் நடத்தி வருபவர், தேவேந்திரன். இவரது கடையில், இரண்டு நாள்களுக்கு முன்பு, கச்சிதமான உடையணிந்த இளைஞர் செல்போன் சர்வீஸ் செய்து தர வேண்டும் எனக்கூறி, செல்போனைக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், இரண்டு நாள்களுக்குப்பிறகு நேற்று இரவு(டிச.14) மீண்டும், செல்போன் கடைக்கு வந்த அந்த இளைஞர், தான் கொடுத்த செல்போனைக் கேட்டுள்ளார். அப்போது, கடையின் உரிமையாளர் செல்போனை தேடிக் கொண்டிருந்தபோது, அந்த கச்சித உடையணிந்த இளைஞர், இரண்டு விலை உயர்ந்த செல்போன்களை திருடிப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, அங்கிருந்து தப்பிச் செல்கிறார்.
இந்தக் காட்சி அந்தக் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து பீர்க்கன்கரணை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு செல்போன் திருடிய இளைஞரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பாடலாசிரியர் சினேகன் செல்ஃபோன் திருட்டு - இளைஞருக்கு தர்ம அடி!