ETV Bharat / state

தமிழ்நாட்டில் 3.80 லட்சம் பேர் எழுதிய டெட் தேர்வு - தேர்வு வாரியம்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளை 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர்.

தேர்வு
author img

By

Published : Jun 9, 2019, 9:02 PM IST

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு பி.எட். பட்டப் படிப்பினை முடித்த ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு இன்று நடைபெற்றது. அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி மாநில அரசால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாகும்.

2019ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விண்ணப்பித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு இன்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணி வரை தேர்வு நடைபெற்றது. 150 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வினை பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஆர்வத்துடன் எழுதினர்.

இன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் 32 மாவட்டங்களில் 1,082 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வினை எழுதுவதற்கு 4,20,957 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் 3,80,317 பேர் தேர்வினை எழுதியுள்ளனர் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்விற்கான முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

 ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2
 3 லட்சத்து 80, 317 பேர் எழுதினர்
 ஒரு மாதத்திற்குள் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டம்

 சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு பி.எட். பட்டப் படிப்பினை முடித்த ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு இன்று நடைபெற்றது.
 அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி   மாநில அரசால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாகும்.
 2019 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விண்ணப்பம் செய்த  பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு இன்று நடைபெற்றது
 காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணி வரை தேர்வு நடைபெற்றது. 150 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வினை பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஆர்வத்துடன் எழுதினர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 இன்று நடை பெற்றது. தமிழகத்தில் 32 மாவட்டங்களில் 1082 மையங்களில் நடைபெற்ற தேர்வினை எழுதுவதற்கு 4,20,957 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் 3,80,317 பேர் தேர்வினை எழுதியுள்ளனர் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
 இந்தத் தேர்விற்கான முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.