பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவரும் வில்சனை கொலை செய்யப்பயன்படுத்திய துப்பாக்கியை சப்ளை செய்தவருமான இஜாஸ் பாட்ஷா(43), தமிழ்நாடு காவல்துறையினரால் நேற்றிரவு பெங்களூரில் உள்ள கலாசிப்பாளையத்தில் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக பெங்களூருவில் முகம்மது ஹனிப் கான், இம்ரன் கான், முகமது சையது ஆகிய மூன்று நபர்களை கடந்த 7ஆம் தேதி தமிழ்நாடு கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து மூன்று துப்பாக்கிகள் மற்றும் 89 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து அவர்களை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவர் ரோஸ்லின் துரை அனுமதி வழங்கினார்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றிரவு பயங்கரவாதி இஜாஸ் பாட்ஷாவை தமிழ்நாடு கியூ பிரிவு காவலர்கள் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்ற நடுவர் ரோஸ்லின் துரை, இஜாஸை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: வில்சனை கொலை செய்த குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ய வேண்டும்!