ETV Bharat / state

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட்

சென்னை: பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு
author img

By

Published : Jun 2, 2019, 7:45 PM IST

இது குறித்து அரசுத் தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு துணைப் பொதுத்தேர்வெழுத விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) ஜூன் 6ஆம் தேதி மதியம் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பு மார்ச் 2019 பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்து வருகை புரியாத, தேர்ச்சி பெறாத தேர்வர்கள், தங்களது பதிவெண், பிறந்த தேதியினைப் பதிவு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நேரடியாக ஜூன் 2019 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், விண்ணப்ப எண், பிறந்த தேதியினைப் பதிவு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பத்தாம் வகுப்பு மார்ச் 2019 அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கு வருகை புரியாதோர், அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வில் 25 மதிப்பெண்களில் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் 15க்கு குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள், நேரடியாக ஜுன் 2019 அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஆகியோர் நடைபெறவுள்ள ஜூன் 2019 சிறப்பு துணைப் பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுத வேண்டும். அறிவியல் பாடத்தில் கருத்தியல், செய்முறை என எந்தப் பகுதியில் தோல்வியடைந்தாலும், அந்தப்பகுதியை மட்டும் தேர்வர்கள் தேர்வெழுதலாம் .

செய்முறைத் தேர்வெழுத வேண்டிய தனித்தேர்வர்களுக்குத் தேர்வுக்கூட அனுமதி சீட்டில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையத்திலேயே 10.6.2019 , 11.6.2019ஆகிய இரு நாட்களில் செய்முறைத் தேர்வு நடத்தப்படும். எனவே, இந்த தேர்வர்கள் உரிய தேர்வு மைய தலைமையாசிரியரை அந்த நாட்களில் அவசியம் சந்திக்க வேண்டும். உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்” என்று கூறப்பட்டுள்ளது.

10 ம் வகுப்பு சிறப்புத்துணைத் தேர்வு
நாளை ஹால்டிக்கெட் பதிவிறக்கம்
சென்னை,
10 ம் வகுப்பு சிறப்புத்துணைத் தேர்வு எழுதுவதற்கு நாளை ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
  பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு   சிறப்புத் துணைப்
பொதுத்தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட  
விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட)  3.6.2019  மதியம்
முதல் www.dge.tn.gov.in  என்ற இணையதளம் வழியாக தேர்வுக் கூட அனுமதிச்
சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
    பத்தாம் வகுப்பு மார்ச் 2019  பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்து வருகை புரியாத , தேர்ச்சிப் பெறாத தேர்வர்கள், தங்களது  பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தேர்வுக் கூட அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
நேரடியாக ஜுன் 2019 தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள், விண்ணப்ப எண்
மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினைப்
பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
 பத்தாம் வகுப்பு மார்ச் 2019  அறிவியல்பாட செய்முறைத் தேர்வுக்கு
வருகைபுரியாதோர் மற்றும் அறிவியல் பாடத்தில், செய்முறைத் தேர்வில் 25
மதிப்பெண்களில் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் 15க்கு குறைவாக பெற்றுதேர்ச்சி அடையாதவர்கள் மற்றும் நேரடியாக ஜுன் 2019, அறிவியல் பாட செய்முறைத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் ஆகியோர் நடைபெறவுள்ள ஜூன் 2019 சிறப்புத்துணைப் பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுத வேண்டும். அறிவியல்பாடத்தில் கருத்தியல், செய்முறை என எந்தப் பகுதியில் தோல்வியடைந்தாலும், அந்தப்பகுதியை மட்டும் தேர்வர்கள் தேர்வெழுதலாம் .
செய்முறைத் தேர்வெழுத வேண்டிய தனித்தேர்வர்களுக்குத் தேர்வுக்கூட
அனுமதி சீட்டில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையத்திலேயே 10.6.2019 மற்றும் 11.6.2019ஆகிய இரு நாட்களில் செய்முறைத் தேர்வு நடத்தப்படும். எனவே, இந்த தேர்வர்கள் உரியதேர்வு மைய தலைமையாசிரியரை அந்த நாட்களில் அவசியம்  சந்திக்க வேண்டும். உரிய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுதஅனுமதிக்கப்படமாட்டார் என அதில் கூறப்பட்டுள்ளது. 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.