சென்னை: பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு குறித்து அரசுத்தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்வினை எழுத விரும்பி, அறிவியல் செய்முறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள், வரும் 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் மாவட்ட கல்வி அலுவலகங்களில் பதிவு செய்துகொள்ளலாம்.
மேலும் இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்பிலும் கலந்துகொள்ள வேண்டும்.
அறிவியல் பாட செய்முறைப் பயிற்சிக்கு விண்ணப்பித்தப் பின்னர், அதற்கான அத்தாட்சி சீட்டைப் பெற்று மாவட்டக்கல்வி அலுவலகங்களில் அமைந்துள்ள அரசுத் தேர்வு மையத்தில் சமர்ப்பித்து விட்டு, ஏப்ரல் 2023 பொதுத்தேர்விற்கு டிசம்பர் 26-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்’ என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:ஜேஇஇ 10-ம் வகுப்பு மதிப்பெண் பதிவு செய்வதில் விலக்கு தேவை - தேசிய தேர்வு முகமைக்கு கோரிக்கை