பி.இ., பி.டெக். பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசை பட்டியலை 28ஆம் தேதி உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டார். பொறியியல் படிப்பில் சேர மொத்தம் காலியாக உள்ள ஒரு லட்சத்து 63 ஆயிரம் இடங்களுக்கு 1 லட்சத்து 12 ஆயிரத்து 406 மாணவர்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர்.
அவர்களின் சிறப்பு பிரிவினருக்கான ஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்கள் பிரிவில் 721 மாணவர்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான ஒதுக்கீடு பிரிவிற்கு 363 மாணவர்களும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 74 பேரும் விரும்பும் கல்லூரிகள், இடங்களை பதிவு செய்துள்ளனர்.
சிறப்புப் பிரிவினருக்கான தற்காலிக ஒதுக்கீடு www.tneaonline.org என்ற இணையதளத்தில் உத்தேச ஒதுக்கீடு இன்று (அக்.05) 7 மணிக்கு அறிவிக்கப்படும். அக்டோபர் ஆறாம் தேதி மாணவர்களுக்கு எந்த கல்லூரியில் எந்த பாடப்பிரிவு ஒதுக்கப்பட்டது என்பதற்கான இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
'எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!' - பொடிவைத்து ட்வீட் செய்த ஓ.பன்னீர்செல்வம்